பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 மருந்தைக் கொடுத்தாலும் மனம் மயங்குகிறது. துக்கம் வந்தா லும், கோபம் வந்தாலும் மூச்சு வேகமாக வருகிறது. மூச்சு வாயு, மனமோ வாயுவின் அம்சம். "மனோவாயு நிற்கும் வண்ணம்' என்று தாயுமானவர் பாடுவார். மூச்சுக் காற்றின் பயிற்சியினால் மனத்தையே மாற்றலாம் என்று யோகிகள் கண்டார்கள். அதற்காக இயல்பாக வரும் மூச்சை மாற்றினார்கள். இட நாடி, வல நாடி என்று மூச்சை மாற்றி மாற்றிப் பழகினால் நடுவில் மூச்சு வரும், மனம் தெளியும் என்று எண்ணினார்கள். மூச்சை உள்ளே இழுப்பதற்குப் பூரகம் என்றும், உள்ளே நிறுத்துவதற்குக் கும்பகம் என்றும், வெளியில் விடுவதற்கு ரேசகம் என்றும் பெயர். நாம் மூச்சை விடுவதும், இழுப்பதுமாக இருக்கிறோம்; நிறுத்துவது இல்லை. வாசியோகம் மூச்சை நிறுத்தப் பழகினால் மூலாதாரத்திலுள்ள அக்கினி மேலே எழும். ஆதாரந்தோறும் அந்த அக்கினி சென்று கடைசியில் ஆறு ஆதாரங்களும் கடந்து மேலே உள்ள சந்திர மண்டலத்தை முட்டும் என்றும், அங்கிருந்து அமுத தாரை ஒழுகும் என்றும், அதனை உண்டவர்கள் நரை திரை மூப்பு இல்லாமல் வாழ் வார்கள் என்றும் யோகியர்கள் சொல்வார்கள். அப்படிச் செய்யும் யோகத்திற்கு 'வாசி யோகம் என்று பெயர். மூச்சை அதிக நேரம் நிறுத்தும் வலிமை கைவரப் பெறுபவர் யோகியர். சரியானபடி குருநாதன் அருள் பெற்றுத் தக்க வழியில் யோகம் செய்தால் அதனால் பயன் கைகூடும். அது மிகமிக அரிது. அல்லாதவர்கள் மூச்சு முட்டித் திணறுவார்கள். நாம் மூச்சு இழுத்துச் சிறிது நேரம் நிறுத்தி வெளிவிட்டால் உடம்பெல்லாம் படபடக்கும். கொஞ்சம் மயக்கம் வந்தது போல இருக்கும். மிகவும் சங்கடமான காரியம் அது. மனத்தை அடக்கு வதற்கு இந்த வழி செயற்கை வழி; சிங்கத்தைக் கூட்டில் அடைத்து எங்கும் போகாமல் நிறுத்துவது போன்ற வழி. இதில் அபாயம் உண்டு. மந்திரத்தினால் சிங்கத்தை அடக்கி வைப்பது போலப் பக்தி உணர்ச்சியினால் மனத்தை எளிதில் அடக்கிவிடலாம். 156