பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 முன்பு பாடம் கேட்ட இடமோ பெரிய இடம் இப்போது அதற்கு மேலும் சிறந்த புலமை வர வேண்டுமானால் முன்பு கேட்ட ஆசிரியரைவிடப் பெரிய ஆசிரியரைக் கிட்ட வேண்டும். ஞான குருவாகிய சிவபெருமானைவிடப் பெரிய குருவை அவர் எங்கே தேடுவார்? ஆனாலும் அப்படி ஒரு குரு உண்டு என்பதை அவர் தெரிந்து கொண்டார். சிவபெருமானுக்குக் குருவாக இருந்து அருள் செய்த குமர குருபரனுடைய நினைவு அவருக்கு வந்தது. அந்தப் பெருமானை உபாசித்துத் தமக்குச் சிறந்த தமிழ் அறிவைத் தந்தருள வேண்டுமென்று வேண்டினார். முருகப் பெருமான் அவருடைய விண்ணப்பத்தை ஏற்றுச் செந்தமிழ்ப் பெரும் புலமை உண்டாகும்படி அருள் செய்தான். அதன் பயனாக அவர் பொதிய மலையில் ஒரு தமிழ்ச் சங்கத்தை வைத்து நடத்தினார். அகத்தியம் என்று மூன்று தமிழுக்கும் உரிய நூலை இயற்றினார். அதனால் செந்தமிழ்ப் பரமாசாரியன் என்ற பெயர் முருகப் பெருமானுக்கு ஏற்பட்டது. "அகத்தியனுக்குத் தமிழ் அறிவுறுத்த செந்தமிழ்ப் பராமாசாரியன்' என்று சிவஞான முனிவர் முருகனைச் சொல்வார். 'சிவனை நிகர் பொதியமலை முனிவனக மகிழ இரு செவி நிறைய இனியதமிழ் பகர்வோனே" என்று அருணகிரியாரும், "குறுமுனிக்குந் தமிழுரைக்கும் குமரமுத்தந் தருகவே' என்று குமரகுருபரரும் இந்த நிகழ்ச்சியைச் சொல்லிப் பாராட்டி னார்கள். ஆகவே செந்தமிழ் நூல் விரித்தோனை என்பதை, குடமுனிக்கு இலக்கணத்தை விரிவாக உபதேசம் பண்ணின வனை என்ற பொருள் உடையதாகக் கொள்ளலாம். மற்றொரு பொருளையும் சொல்வதற்கு வகை உண்டு. ஞான சம்பந்தப் பெருமான் முருகனுடைய திரு அவதாரம் என்பது அருணகிரியாரின் கருத்து. அவர் தமிழ் விரகர் என்ற பெயரை உடையவர். திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகள் அந்தப் பெருமான் பாடியவை. அவருடைய திருப்பாட்டுக்களில் தமிழ் அழகு ஒழுகும். சந்த நயங்கள், அழகிய வருணனைகள் மலிந்து நிற்கும். அவர் இருபத்து நாலாயிரம் பதிகங்கள் பாடினார் என்று தெரிய வருகிறது. அத்தகைய தமிழ் விரகர் முருகப் பெருமானுடைய திருஅவதாரம் என்பதை எண்ணி, 19C