பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 இதைத் திருமுருகாற்றுப் படையின் உரையில் உரைகாரர் எடுத்துக்காட்டியிருக்கிறார். இங்கே திருமணக் கோலத்தில் மணம் பொருந்திய கடம்ப மாலையை முருகன் அணிந்திருத் கிறான். ஆகவே, . கந்தக் கடம்பனை என்று சொன்னார். . ; செங்கோட்டு வெற்பன், செஞ்சுடர்வேல் வேந்தன் ஆகிய இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையன என்று பார்த் தோம். அதுபோல் விளங்கு வள்ளி காந்தன், கந்தக் கடம்பன் என்ற இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையன. தன்னுடைய காதலியாகிய வள்ளியோடு திருமார்பில் மணம் பொருந்திய மனமாலையாகிய கடம்ப மாலையை அணிந்து கொண்டு எம் பெருமான் அழகிய திருக்கோலத்தோடு வீற்றிருக்கிறான். அதனை இந்த இரண்டு தொடர்களும் நினைப்பூட்டுகின்றன. - உலகம் எங்கும் ஆணும் பெண்ணுமாகிய உடம்பு பெற்று உயிர்கள் உலவுகின்றன. அப்படி அவை பெற்றமையினால் உலகம் மேலும் மேலும் வளர்கிறது. புதிய புதிய உடம்புகள் தோற்றுகின்றன. அத்தகைய மரபு தொடர்ந்து வரவேண்டும் என்று கருதியே இறைவனும் இரு வேறுருவமாக நின்று சக்தனும் சக்தியுமாக விளங்குகிறான். . "பெண்பால் உகந்திலனேற் பேதாய் இருநிலத்தோர் விண்பாலி யோகெய்தி வீடுவர்காண் சாழலோ" . என்று இந்தத் தத்துவத்தை மணிவாசகர் பேசுகின்றார். முருகப் பெருமான் வள்ளி நாயகியோடு மகிழ்ச்சியாக வீற்றிருக்கிறான். அதனால் உலகம் எல்லாம் மணம் பெற்று, வாழ்வு பெற்று இயங்குகிறது. - மயில் வாகனன் சிவந்த நிறம் உடையவனாக, ஆறு உருவமும் ஒன்றாக இணைந்த கந்தனாக, திருச்செங்கோட்டில் எழுந்தருளி இருக்கும் வேலனாக, வள்ளியம்பெருமாட்டியோடு மணமாலை அணிந்து விளங்குபவனாக உள்ள பெருமான் உலகில் தன்னை விரும்புகிற 4.92