பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 இடத்தில் விடலாம்; வேண்டாதபோது அடக்கிக் கொள்ளலாம். அப்படியா இருக்கிறது மனம்? நம் விருப்பப்படி அதனை வசப் படுத்த முடியவில்லை. ஆனால் இறைவன் திருவருளைப் பெற்றால் மனம் அடங்கும்; நம் வசப்பட்டுவிடும்; எந்தச் சமயத் தில் எப்படி அதை உருவாக்க வேண்டுமோ அப்படியெல்லாம் செய்யலாம். நம்முடைய சொந்த முயற்சியினால் அதனை வசப் படுத்திவிடலாம் என்பது இயலாத காரியம். இறைவன் திருவருள் வந்து வந்து தாக்கினால்தான் மனம் நம்முடைய வயப்படும். மனோலயம் தானே தரும் என்று அருணகிரியார் சொல்லும்போது, அதற்குக் காரணம், வந்து வந்து தாக்கிய அருள் என்பதை உணர வேண்டும். ஒரு குழந்தை ஒரு பொம்மையிடத்தில் மிகவும் ஆசையாக இருக்கிறது. அந்தப் பொம்மையில் ஆணி நீட்டிக் கொண்டிருக் கிறது. அது குழந்தையின் கையைக் கிழித்துவிடப் போகிறதே என்று தாய் அஞ்சுகிறாள். அது பிடிவாதமாகப் பற்றிக் கொண்டிருக் கிறது. என்ன சொல்லியும் கேட்பதில்லை. அந்தக் குழந்தையை மெல்ல உறங்கச் செய்கிறாள் தாய். சிறிது நேரத்தில் தூங்கி விடுகிறது. அப்போது குழந்தை தன்னை அறியாமல் கையில் இருந்த பொம்மையை நழுவ விட்டுவிடுகிறது. அதனைப் பற்றிக் கொண்டிருக்கிற நிலை மாறியதால் பொம்மை தானே நழுவி விடுகிறது. அதைப் போல ஆனந்தத் தூக்கம் வரும்போது மனோ லயம் தானே சித்தித்துவிடும். நான் எனது என்பவையாவுமே கழன்றுவிடும். மனம் தவியாய்த் தவிக்கிறது; துடியாய்த் துடிக்கிறது. ஒரு கணமேனும் ஓரிடத்தில் நிற்பது இல்லை. தளர்ந்து எழுந்து படரும் கொடிக்கு ஒரு கம்பை நட்டு நிறுத்தினால் அக்கொடி கம்பைப் பற்றிக் கொண்டே போகும். அப்படியே, நிற்கமுடியாது தவிக்கின்ற மனத்திற்கு ஆண்டவனாகிய கொழுகொம்பு கிடைத்தால் அது நேராக நிற்கிறது. மனோலயம் உண்டாகிறது. நாளடைவில் மனம் வேலை செய்யாமல் அடங்கி விடுகிறது. வந்து வந்து தாக்கிய இன்பம் மனத்தை லயப்படுத்தியதோடு நான் எனது என்பவற்றை மாய்த்து உயிரையும் தன் வசத்தில் ஆக்கிவிடும். அப்போது நான் என்ற உணர்ச்சியே இல்லாமல் போய்விடும். மனோலயம் தானே தரும் எனைத் தன்வசத்தே ஆக்கும். 212