பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராப்பகல் அற்ற இடம் நமக்கு அன்பு உண்டாகவேண்டுமானால் அதற்கும் அவனுடைய திருவருள்தான் துணையாக இருக்கவேண்டும். ஆண்டவனை நாம் பார்ப்பதற்கு முன்பு அவன் நம்முன்னால் வந்து நம்மைப் பார்க்க வேண்டும். தாமரை மலர்ந்து சூரியனுக்கு முன்பாக நின்று ஒளியை ஏற்றுக் கொள்வது இல்லை. சூரியன் வந்த பிறகு தாமரை மலர்ந்து பின்பு ஒளியை ஏற்றுக் கொள்கிறது. அப்படி முதலில் முருகனுடைய திருவருள் கிடைத்து அதனால் அன்பு வரவேண்டும். அந்த அன்பின் பயனாக அவன் தாளை வணங்கவேண்டும். அராப்புனை வேணியன் சேய் அருள் வேண்டும் அவிழ்ந்த அன்பால் குராப்புனை தண்டையம் தாள் தொழல் வேண்டும். அவிழ்ந்த அன்பு அன்பு அவிழ்வதாவது யாது? - இறைவன் நம்முடைய மனத்தில் நல்ல குணங்களையும், பொல்லாத குணங்களையும் ஒரு சேர வைத்திருக்கிறான். அத னிடையே அவனே நின்று கொண்டிருக்கிறான். மனத்தில் உள்ள நல்ல குணங்கள் மலர்ந்து, அதனால் உயிர்கள் நல்ல நெறியை அடையவேண்டும் என்பதே ஆண்டவனின் திருவுள்ளம். மனம் மலராமல் மொட்டாகப் பக்குவம் இன்றி இருந்தால் முனை யுடையதாக இருக்கும். தாமரை மலராமல் இருக்கும்போது பார்த்தால் முனையையுடைய அரும்பாக இருக்கும். அந்த அரும்பின் கூர்மை மெல்லிய உடம்பைக் குத்திவிடும். மனம் பக்குவம் அடையாமல், மலராமல் மொட்டாக இருக்கும்போது 'நான் என்ற தன்முனைப்போடு நிற்கும். அதில் அன்பு என்ற மணம் மலரும்போது அந்த முனைப்பு விரிந்து, இல்லாமல் போய்விடும். நமக்கு அன்பு உண்டு. ஆனால் அந்த அன்பு மலர்ச்சி பெறாமல் குறுகிய உருவத்தில் நிற்கிறது. நம்மைச் சார்ந்தவர்கள் என்று யாரை யாரை நினைக்கிறோமோ அவர்கள் அளவில் அன்பு செல்கிறது. உண்மையில் உலகம் எல்லாம் நம்மைச் சார்ந்தது என்ற அறிவு வரவேண்டும். அப்படியின்றி நம் 229