பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 பேரானந்தப் பெருவாழ்வாகவும் அநுபவத்தில் உணர வாய்ப் புண்டு என்ற நம்பிக்கையை ஊட்டுகிறார். - முருகனது துதியாக இருபபதோடு கந்தர் அலங்காரம் வாழும் வகையையும் தெரிவிக்கிறது. நம்முடைய சமயக் கருத்துக்கள் பலவற்றை வாழும் வகைக்கு ஒத்தபடி கூறுகிறது. பலவேறு வகையில் வாழ்பவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முறை எளிதாக இருக்கும்வண்ணம் பலபல முறைகளைப் புலப் படுத்துகிறது. இத்தகைய கருவூலத்தைத் தமிழர் பெற்றது பெரும்பேறு. இதனை விளக்கும் வாய்ப்புக் கிடைத்தது எனது முன்னைப் பிறவியின் புண்ணியப் பயன். வாழ்க்கையில் நடைமுறையில் கடைப்பிடிக்கக் கூடிய வழிகளை அருணகிரிநாதர் நுட்பமாகக் கூறியுள்ளார். அவற்றை விரிவாக விளக்கியிருக்கிறேன். புராண வரலாறுகளின் உள்ளுறை களை என்னால் இயன்ற வரையில் புலப்படுத்த முயன்றிருக் கிறேன். மனத்தை வயப்படுத்துவதே எல்லாச் சாதனங்களுக்கும் இலக்கு. அதனை வாழ்வியலில் எளிதிலே பயில அருணகிரியார் வழிகாட்டுகிறார். அத்தகைய இடங்களைக் கூடியவரையில் உலக நிகழ்ச்சிகளோடும் மனித மனப்பாங்கோடும் இயைத்துக் காட்டி விளக்கியிருக்கிறேன். இந்தப் புத்தகத்தில் ஏழு பாடல்களின் விளக்கம் (75 - 81) இருக்கிறது. முதற்பாட்டில் படிப்படியாக இறைவன் அருளைப் பெறும் எளிய வழிகளை எதிர்மறை முகத்தால் தெரிவிக்கிறார் அருண கிரியார். இரண்டாவது பாடலில் உடலுறுப்புக்களை இறைவனது வழிபாட்டில் ஈடுபடுத்த வேண்டும் என்பதை எதிர்மறை முகத்தால் கூறுகிறார். மூன்றாவது பாடலில் மாதர் மயலை மாற்றி முருகன் திருவடித் தியானம் செய்ய வேண்டும் என்பதைச் சொல்கிறார். நான்காவது செய்யுளில் உறவினரும் உடைமையும் நில்லா என்பதை விளக்கி இறைவனைப் போற்றவேண்டும் என்று நல்லுரை கூறுகிறார். ஐந்தாம் செய்யுள் காம மயக்கத்தால் அல்லற்படுவதைச் சொல்கிறது. ஆறாவது செய்யுளும் ஏழாவதும் இறைவனுடைய அருள் வல்லபத்தால் மரணபயத்தையும் 242