பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழனித் திருநாமம் போது கொஞ்சம் மழைக்காற்று அடித்தது. கார் வந்தால் மகிழ்வது மயிலுக்கு இயல்பு. ஒரு மயில் அந்தச் சமயத்தில் தன் தோகையை விரித்து ஆடியது. மயில் ஆடும்போது 'சர் சர் என்ற ஒலி உண்டாகும். பேகன் பார்த்தான். மயிலைக் கண்டவுடனேயே அவனுக்கு அது வெறும் பறவையாகத் தோன்றவில்லை. முருகப் பெருமானுக்கு அன்பனாகையால், எம்பெருமானின் வாகனமாகிய இது குளிரில் நடுங்குகிறதே! என்ற எண்ணம் தோன்றியது. அடுத்த கணத்தில் தன்மேலே இருந்த போர்வையை எடுத்து அதன்மேல் போட்டுவிட்டான். அவனுக்குப் பறவைகளிடத்தில் இரக்கம் இருப்பது இயல்பு; ஆனால் எல்லாப் பறவைகளிடத் திலும் அவனுக்கு இத்தகைய இரக்கம் உண்டாகவில்லை. இயல் பாகவுள்ள இரக்கமும், முருகனிடம் உள்ள அன்பும் சேர்ந்து மயிலுக்குப் போர்வை போர்த்தும்படி செய்தன. ஆவியர் குலத் தில் வந்த பேகன் இங்கே வாழ்ந்திருந்தான் என்பதை இந்த வரலாற்றோடு சேர்த்துச் சங்ககாலத்து நூல்களில் பார்க்கலாம். அந்தக் காலத்தில் பழனிமலையைப் பொதினி என்று சொன்னார்கள். முருகன் காக்கின்ற மலை என்று சங்க நூலில வருகிறது. நகர் என்பது கோயிலுக்குப் பெயர். 'நெடு நகர்ப் பொதினி” என்றே வருகிறது. ஆகையால் பழங்காலத்திலேயே பழனி மலையும், மலையிலே முருகனுக்குத் திருக்கோயிலும் இருந்தன என்று தெரியவருகிறது. . புராண வரலாறு பழனியின் பெருமையை நாம் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று பிற்காலத்தில் பெருமக்கள் வேறு ஒரு வரலாற் றையும் நமக்கு நினைப்பூட்டுகிறார்கள். பொதினி என்பது பழனி என்று மாறியது என்று ஆராய்ச்சிக்காரர்கள் சொல்வார்கள். ஆனால் பக்தர்கள் இதற்கு வேறு ஒரு காரணம் சொல்வது உண்டு. பழம் நீ என்பதே பழனி என்று குறுகியது என்பார்கள். ஒரு சமயம் நாரத முனிவருக்கு முருகப் பெருமானுடைய பெருமையை உலகத்திற்குக் காட்ட வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது. அவர் எதையாவது சாதிக்க வேண்டுமானால் சண்டை மூட்டிச் சாதிப்பார். இங்கும் ஒரு சிறிய கலகத்தை விளைவித்து உலகம் எல்லாம் கொண்டாடுகிற ஒரு தலத்தை 255