பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்த குற்றம் என்ன? சென்ற பாடலில் பழனி ஆண்டவனுடைய நினைவை அருணகிரிநாத சுவாமிகள் ஊட்டினார். இன்று பார்க்கப் போகிற இந்தப் பாடலில் திருத்தணிகை ஆண்டவனுடைய நினைவு வரும்படியாகச் செய்கிறார். அதோடு தாம் முழுப் பொய்யர் என்பதையும் புலப்படுத்துகிறார். - பொய்யர் இறைவன் திருவருளில் ஈடுபட்டு, கரசரணாதி அவயங் களினால் வழிபட்டு, மனத்தினாலே சிந்தித்து, வாக்கினாலே பாடிப் பேரின்ப அநுபவத்தைப் பெற்றவர் அருணகிரிநாதர். |த்தகையவர், "ஆண்டவனே! உன் தாளைத் தொழாத சென்னி ம், உன் திருமேனியை நாடாத கண்ணும், உன் திருமுன் தாழாத கையும், உன் புகழ் பாடாத நாவும் எனக்கே தெரிந்து பிரமன் படைத்தனனே!' என்று புலம்புவது முழுப் பொய் அல்லவா? மலடி மகன் என்று சொல்வது போலல்லவா இது இருக்கிறது? மகன் என்ற வார்த்தையே அவனைப் பெற்றவள் மலடி அல்ல என்பதைத் தெளிவாகப் புலப்படுத்துகிறது. இந்தப் பாட்டில் சூடாத சென்னி, நாடாத கண், தொழாத கை ஆகிய வற்றைப் பிரமன் படைத்திருக்கிறானே என்று மட்டும் சொல்லி யிருந்தால் ஒருகால் அது மெய்யோ என்று நம்பலாம். - பாடாத நாவும் எனக்கே தெரிந்து படைத்தனனே என்று சொல்கிறார். இந்தப் பாட்டைப் பாடியது அவர் தானே? ஆகவே அவர் பொய் சொல்கிறார் என்று நிச்சயமாகச் சொல்லி விடலாம். பொய்யும் மெய்யும் இவை பொய்போலக் கோற்றினும் பொய்யாகா. சத்தியம்