பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்த குற்றம் என்ன? உறுப்புக்களால் பயன் ம் உடலில் உள்ள உறுப்புகளில் சிலவற்றை நாம் இயக்க லாம். சில தாமே இயங்குவன. இதயம் இருக்கிறது. அது நம் மால் இயக்க முடியாதது. அது நின்று விட்டால் மீண்டும் நம்மால் அதை இயக்க முடியாது. கை கால் தலை இவைகளை நாம் இயக்கலாம். நம்மால் இயக்குவதற்குச் சாத்தியமான, புறத்தில் இருக்கிற உறுப்புகளைச் சரியான முறையில் பயன் படுத்திக் கொள்வது நமது கடமை. உயர்ந்த பொருளைக் குறைந்த விலையில் வாங்கிவிட்டால் மனிதர்கள் எல்லோருமே மகிழ்ச்சி அடைவார்கள், சிறிய பொருளால் பெரிய பொருளை வாங்கவேண்டுமென்ற ஆசை மனிதனுக்கு இருக்கிறது. கிடைத்தற்கரிய பொருள் கிடைத்தால் அதைக் கொண்டு மிகப் பெரும் பயனை அடைவதுதான் முறை. பணம் கொடுத்து மற்றப் பாண்டங்களை வாங்கிவிடலாம். இறைவன் தந்திருக்கிற பாண்டமாகிய உடம்பு எத்தனை பொருள் கொடுத்தாலும் வாங்க முடியாதது. நமது சுண்டுவிரல் போய் விட்டது. லட்சம் ரூபாய் கொடுத்தாலும் அதை வாங்க முடியாது; புதிதாக ஒன்று பண்ண முடியாது. அத்தகைய அரிய உறுப்பு களைக் கொண்டு மிக அதிகமான பயனைப் பெற வேண்டும் என்று மனிதன் நினைக்க வேண்டும். எம்பெருமான் அருளாகிய பயனைப் பெறுவது ஒன்றுதான், நாம் அடைகிற பயன் எல்லா வற்றையும்விடச் சிறப்பானது என்பதை உணர்ந்து பெரியோர்கள் கரசரணாதி அவயவங்களை எல்லாம் ஈசுவரார்ப்பணம் செய்தார்கள். கையும் காலும் உடையவர்களாக நாம் இருப்பதனால் அவற்றைக் கொண்டு தன்னை வணங்கவேண்டும் என்றே ஆண்டவன் கை யும் காலும் உடையவனாக எழுந்தருளியிருக்கிறான். இறை வழிபாடு உடம்பில் உள்ள அங்கங்களுக்கு ஏதாவது நல்ல வேலை கொடுக்காவிட்டால் கெட்ட வேலையைத்தான் செய்யும். அவற் றுக்குச் சரியான வேலையைக் கொடுக்க வேண்டும் என்பதற் காகவே பெரியோர்கள் ஆலயங்களுக்குச் செல்வது, ஆண்டவன் சந்நிதானத்திலே சென்னி தாழ்த்தி வணங்குவது, கை கூப்புவது, தோத்திரங்களை நாவினாலே சொல்வது ஆகிய பல செயல்களை 273