பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர் கொண்டு போவர்? தமக்கு ஏற்றம் வந்துவிட்டதாகக் கொண்டாடிக் கொண்டிருக் இறார்கள். 'கூர்கொண்ட வேலனைப் போற்றாமல், அப்படிப் போற்றுகின்ற பக்தி தம்மிடத்தில் இருக்கிறது என்று ஏற்றம் கொண்டாடாமல், உலகத்துப் பொருள்களைப் பெற்றதனாலே தமக்கு ஏற்றம் வந்துவிட்டதாக இவர்கள் கொண்டாடு கிறார்களே! என்று இரங்குகிறார் அருணகிரியார். 'பூண்பனவும், தார்கொண்ட மாதரும் மாளிகையும் பணச்சாளிகையும் பெற்றிருக் கிறோம் என்று ஏற்றம் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்களே. இவை நிலை என்று எண்ணுகிறீர்களா?' என்று கேட்கிறார். பூண்பன - அணிகின்ற அணிகலன்கள். தார்- மாலை. தார்கொண்ட மாதர் - தம் மாலையை ஏற்றுத் தமக்குத் துணையான மனைவி, பணச் சாளிகை - பணப்பை. இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு தம் பெருமைக்கு இவை காரணம் என்று எண்ணி, மரணம் என்ற ஒன்று உண்டு என்பதை மறந்து செருக்கி நிற்கின்ற செல்வர்களைப் பார்த்துச் செய்கின்ற உபதேசம் இது. காலன் போர்கொண்ட காலன் என்கிறார். யமன் யாரிடத்திலும் சிநேகமாக வருபவன் அல்ல. யமன் வந்தால், நான் உன்னோடு வருகிறேன்' என்று சொல்கிற மனிதரும் இல்லை. யமன் வந்தான் என்றால் ஒரே கலக்கந்தான்; அழுகைதான். கொடுத்த கடனைத் திருப்பி ஒருவன் கேட்டாலே நமக்குச் சங்கடம் வருகிறது. உயிரைக் கொண்டு போகிற காலன் வந்தால், நான் வருகிறேன்' என்றா சொல்வோம்? அவன் சும்மா வருவது இல்லை. உயிர்க்கூட்டங்களில் எதுவும், "நான் உலக வாழ்க்கையை விட்டுப் போகவேண்டிய காலம் வந்து விட்டதா? சரி, வருகிறேன்' என்று அமைதியாக வராது என்பதை அவன் நன்கு உணர்ந்திருக்கிறான். அதனால் போர் செய்வதற் குரிய ஆயுதங்களுடனே வருகிறான். அவன் கையில் கதை இருக்கிறது. சூலம் இருக்கிறது. பாசம் இருக்கிறது. அவனுடைய உருவமே பயங்கரமாக இருக்கிறது. அவன் சமாதானமாக அலங் காரம் பண்ணிக் கொண்டு வருகிறவனே அல்ல. எப்போதும் போர்க் கோலத்தோடு வருகிறான். அதனால், போர்கொண்ட காலன் 3O7