பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தாகுலம் தீர அரசனும் சேனாபதியும் மற்ற இடங்களில் அரசன், சேனாபதி என்னும் இருவருள்ளும் அரசன் பதவியாற் பெரியவன்; சேனாபதி அவனிடம் ஊழியம் புரிபவனாக இருப்பவன். இங்கே அதற்கு மாறான நிலை. பெயருக்கு அரசனாக இருந்தான் இந்திரன். தேவசேனாபதியாகிய முருகனே உண்மையில் தனிப்பெருந் தலைவனாக நின்று போரை நடத்தினான். போர் நிகழ்ந்த போது ஒரு சமயம் இந்திரனே மயிலாகச் சென்று முருகனுக்கு வாகனமாகி அவனைத் தாங்கி னான். அரசன் உயர்ந்தவனாக இருந்தால் இப்படிச் செய்வானா? போர் முடிந்து தேவர்களுக்கு வெற்றி கிடைத்தது. பிறகு, 'என் வேலை தீர்ந்துவிட்டது; இந்த உத்தியோகம் இனிப் போதும்' என்று முருகன் சொல்லவில்லை. அவன் அப்படிச் சொன்னாலும் தேவர்கள் அவனை விடுவார்களா? 'சுவாமி! போர் முடிந்தாலும் எங்கள் அச்சம் நீங்கவில்லை. போகம் உள்ள இடத்திற்கு எப்போதும் ஆபத்துக் காத்துக் கொண்டு நிற்கும். ஆதலால் இந்தப் போரோடு எங்கள் சங்கடம் போயிற்றென்று நாங்கள் நினைக்க மாட்டோம். நீ இனி எக்காலத்தும் எங்களுக்குக் காவலனாக இருந்து காப்பாற்ற வேண்டும். உன்னையல்லாமல் எங்களுக்கு வேறு துணை இல்லை. போர் ஒழிந்தாலும் நீ எங்களுக்கு அரணாக இருக்கும் உத்தியோகம் உன்னை விட்டு நீங்காது' என்று விண்ணப்பித்துக் கொண்டார்கள். ஆகவே, முருகன் எப்போதும் தேவர்களுக்கு வரும் இடையூறு களைக் காப்பாற்றும் தேவசேனாபதியாகவே இருக்கிறான். 'வானோர் வணங்குவில் தானைத் தலைவ" என்பது திருமுருகாற்றுப்படை. - அவன்தான் உண்மையில் தேவ லோகத்துக்கே அதிபதி. அமராவதியைப் பாதுகாக்கும் ஆற்றலுள்ளவன் அவன்தான். அமராவதி காவலன் நமக்கு அணிமையில் திருத்தணிகையில் மாப்பிள்ளைக் கோலத்தில் எழுந்தருளியிருக்கிறதைக் கண்டு அவன் ஆற்றலைச் சிறியதாக எண்ணக் கூடாது. பேராற்றல் படைத்த தேவர்களுக்கு . க.சொ.V-22 32了