பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யமனுக்கு எச்சரிக்கை அருளும் அந்தக் குழந்தைக்கு ஏற்பட வேண்டியிருந்தது. சிவ பெருமான், 'உன் குழந்தை சரவணப்பூம் பொய்கையில் வளர் கிறான் என்று சொல்ல, உமாதேவி மிக்க அன்புடன் குழந்தையைப் பார்க்க வந்தாள். ஆறு குழந்தைகளாக இருந்த கார்த்திகேயனை அவள் மிக்க ஆர்வத்துடன் தன் இரண்டு கையினாலும் எடுத்து அனைத்தாள். அணைக்கவே, ஆறு குழந்தைகளும் ஒன்றாக, ஆறுமுகமும், பன்னிரு திருக்கரங்களும் உடைய ஆறுகக் கடவுள் ஆனான். உடனே பொற் கிண்ணத்தில் பாலைக் கறந்து அந்தப் பெருமானுக்கு அம்பிகை ஊட்டினாள். ஆறுமுகமும், பன்னிரு திருக்கரங்களும் உடைய அந்தப் பெருமான் கந்தன் என்றும் திரு நாமத்தோடு விளங்கலானான். தனித்தனியாகப் பிரிந்து நிற்பத னால் உலகுக்கு யாதும் பயன் இல்லை. சக்திகள் எல்லாம் ஒன்று சேர்ந்தால்தான் உலகத்துக்குப் பயன் உண்டாகும். இந்தக் சக்தியின் ஒருமைப்பாட்டைப் பராசக்தி தன்னுடைய கையினால் செய்தாள். வெறும் ஞானத்தினால் உலகத்திற்குப் பயன் இல்லை. அறிவு மாத்திரம் தனித்திருந்தால் இன்பம் உண்டாகாது. அருளும், அறிவும் கலந்திருந்தால்தான் உண்மையான இன்பம் உண்டாகும். அறிவினால் மாத்திரம் பார்த்தால் உலகத்தில் பேதம் தெரியும். அறிவை மறந்து அருளினால் பார்த்தால் அபேதம் தோன்றும். 'அருளாலே எவையும்பார் என்றான் - அத்தை அறியாதே சுட்டிஎன் அறிவாலே பார்த்தேன் இருளான பொருள்கண்ட தல்லால் - கண்ட என்னையும் கண்டினலன்; என்னேடி தோழி' என்று தாயுமானவர் பாடுவார். ஞான மயமாக நிலவிய முருகன் உலகத்திற்கு அருள் செய்ய வேண்டுமென்ற பெருங்கருணை யினால் அறப்பெருஞ் செல்வி தன் அருளைக் கலந்து குழைத்த பாலை முருகனுக்கு ஊட்டினாள். இறைவனும் அம்பிகையும் சேர்ந்தால்தான் உலகம் இயங்கும். பரமசிவன் தனக்குள்ளே அம்பிகையை அடக்கிக் கொண்டிருந் தால் அவனுக்கும் இயக்கம் இல்லை; அது காரணமாக உலகமே இயங்காது. 347