பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யமனுக்கு எச்சரிக்கை உறுதியாக எண்ணிக் கொண்டால் போதும், அதுவே யம பயத்தைப் போக்குவதற்குரிய பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு பேசுகின்றார். முருகப் பெருமானைத் தியானம் பண்ணும்போது அவனுடைய திருவுருவத்திலுள்ள பகுதிகளை எல்லாம் ஆர அமர உள்ளத்திலே எழுதிக் கொள்ள வேண்டும். அப்படி எழுதினால் ஒவ்வோர் அங்கமும் ஒவ்வொரு வகையில் நம்முடைய வாழ்நாளில் நலனைத் தரும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இறை வனுடைய படைக்கலங்களை அவனுடைய திருக்கரங்களோடு தியானம் பண்ணினால் நமக்கு வருகின்ற எல்லாவிதமான பயங்களும் அடியோடு மாறி விடும். ஆதலின் இந்தப் பாட்டில் வடிவேல் பெருமானுடைய ஆயுதங்கள் மூன்றை நினைப்பூட்டு கிறார் அருணகிரியார். படைக்கலங்களின் உண்மை முருகப்பெருமான் கரத்திலுள்ள படைக் கலங்கள் உலகத்தில் உள்ள அழிப்புக் கருவிகளாகிய படைக்கலங்களைப் போன்றவை அல்ல. அவை ஞானத்தின் சொரூபம். ஞானசக்தியே வடிவேலாக இருக்கிறது. அதன் அம்சங்களாகவே மற்ற ஆயுதங்களும் இருக் கின்றன. அஞ்ஞானம், மறதி, மரணம், இருள் ஆகிய எல்லா வற்றுக்கும் ஒரு வடிவம் கொடுத்து யமன் என்று சொல்கிறோம். இவற்றையெல்லாம் அடியோடு அழிப்பதற்கு முருகப் பெரு மானுடைய படைக்கலங்கள் இருக்கின்றன. அவை இருளை ஒட்டிப் பளபளக்கும். அசுரர்களை அழித்துத் தேவர்களை வாழ வைக்கும். அவித்தையை நீக்கி ஞான ஒளி தரும். ஆசையைப் போக்கித் தைரியத்தை ஊட்டும். மிகவும் வலிமை உள்ளவன் யமன். அவனை ஒட்டுவதற்கு நம்மிடத்தில் படை இல்லாவிட்டாலும் இறைவனைத் தியானம் செய்து, அவன் திருக்கரத்தில் உள்ள படைகளைச் சிந்தனையில் கொண்டால் அந்த அச்சம் ஓடி விடும். காலனால் துன்பம் வருமே என்ற அச்சமே நமது துன்பத்துக்கு அடிப்படை எங்கே அச்சம் இல்லையோ அங்கே காலனுக்கு வேலை இல்லை. அந்த அச்சத்தைப் போக்குவதற்கு, அச்சம் தோன்றும் இடமாகிய 35:1