பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறுதற்கரிய பிறவி ஒருவரிடத்தில் கைகாட்டிப் பழகிவிட்டால் அவரிடமே மீண்டும் காட்டவேண்டும் என்று சொல்கிறோம். தனியாகச் செய்தல் சாப்பிடுகிற விஷயத்தில் தனியே இருந்து சாப்பிட வேண்டும் என்று ஆசாரக்காரர்கள் சொல்கிறார்கள். எல்லோருடனும் சேர்ந்து சமபந்தி போஜனம் பண்ணுவது தவறு என்றுகூட ஒரு கொள்கை முன்பு இருந்தது. ஒரு சமயம் மகாத்மா காந்தியடிகளிடத்தில் சமபந்தி போஜனத்தைப் பற்றி ஒரு கேள்வி கேட்டார்கள். அவர் மிகவும் அருமையான விடை சொன்னார். "சமபந்தி போஜனம் பண்ணலாமா, கூடாதா?’ என்பது கேள்வி. 'ஒரு காரணத்தைக் கொண்டு நான் கூடாது என்று மறுப்பேன். ஆனால் மற்றொரு காரணத்தைப் பார்த்தால், வேண்டும் என்று ஆதரிப் பேன்' என்று அவர் சொன்னார். அப்படிச் சொன்னதற்குக் காரணங்களை யும் காட்டினார். '"சமபந்தி போஜனத்தால் மட்டும் நிச்சயமாக ஒற்றுமை வரப்போவதில்லை. இளமைப் பருவம் முதற்கொண்டு ஒன்றாகச் சேர்ந்து உண்டு வளர்ந்த அண்ணன் தம்பிகளே ஒருவருக்கொருவர் அடிதடி சண்டை போட்டுக் கொள்கிறார்கள்; சொத்துப் பிரிவினைக்கு வழக்குச் செய்கிறார்கள். ஆகவே வெறும் சமபந்தி போஜனம் மாத்திரம் ஒற்றுமையை உண்டாக்காது. அது மாத்திரம் அல்ல. தனி மனிதன் உடம்போடு சம்பந்தப்பட்ட எல்லாக் காரியங்களையும் தனியாக இருந்து செய்து கொள் கிறான். குளிப்பது, மல்ஜலம் கழிப்பது, இன்பம் உறுவது ஆகிய காரியங்களைத் தனியாகச் செய்கிறான். பிறர் காண அவற்றைச் செய்வது அநாகரிகம் என்று நினைக்கிறான். உண்ணுவதும் சரீர சம்பந்தமான காரியம். ஆகையால் தனித்து உண்ணுவதில் தவறு இல்லை. ஆனால் தனித்து உண்ணுவதும் தவறாகின்ற நிலை ஒன்று உண்டு. நான் உயர்ந்த சாதியைச் சேர்ந்தவன்; மற்றவன் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவன்; ஆகையால் நான் தனியே உண்ண வேண்டும்' என்ற மனோ பாவம் இருந்தால் அப்போது தனித் திருந்து உண்பது தவறு. நான் உண்பதைப் பிறர் காணக்கூடாது; கண்டால் நாணமாக இருக்கும் என்று எண்ணி ஒருவன் தனித் திருந்து உண்டால் அது தவறாகாது. அது அவரவர்களுடைய உடம்புக்கு ஏற்ற காரியம்' என்று காந்தியடிகள் விடையிறுத்தார். 29 o o .# }} i