பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 உதவியான அறிவும் ஆற்றலும் உடைய மக்கட் பிறவி எளிதில் பெறுவதற்குரியது அன்று. பரிணாமம் புல் முதல் யானை வரைக்கும் படிப்படியாக வளர்ந்து பின்பு இந்த உடம்பை எடுத்திருக்கிறோம். "புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்' என்று மணிவாசகப் பெருமான் சொல்கிறார். நவீன விஞ்ஞானி கள்கூடப் பரிணாமம் என்று இதைச் சொல்வார்கள். டார்வின் என்னும் பிரபல விஞ்ஞானி பரிணாமவாதத்தை நிலைநிறுத் தினார். சிறிய பிராணியில் இருந்து வளர்ந்து வளர்ந்து மனிதன் உண்டாகியிருக்கிறானென்று அவர் சொல்கிறார். எந்த வகையில் பார்த்தாலும் மனிதப் பிறப்பு என்பது மிகவும் அருமையான பிறப்புத்தான். எல்லாப் பிறப்புகளிலும் இது சிறந்தது என்பதை யும் தெரிந்து கொள்கிறோம். - 2 சிறந்த பயன் நம்மிடம் ஏதாவது ஒரு கருவி கிடைத்ததானால் அந்தக் கருவியைக் கொண்டு மிகச் சிறந்த பயனை அடைய முயல் கிறோம். சாமான்ய அறிவு உள்ளவன் தன்னுடைய அறிவுக்குப் பட்ட எதையாவது படிக்கிறான். விறகு வெட்டி படிப்பது கிடையாது. ஆனால் அவனும் ஏதாவது நாடோடிப் பாட்டு ஒன்றையாவது கேட்டு இன்புறுகிறான். அறிவிலே சிறந்திருக்கிற மனிதன் இன்னும் சிறந்த நூல்களைப் படிக்கிறான். மேலே போகப் போக நுட்பமான நூல்களை அவன் படிக்கிறான். மிக நுட்பமான நூலைப் படிக்கிறவனையே சிறந்த அறிவு உள்ளவன் என்று சொல்கிறோம். 4C)