பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 இன்ப அநுபவந்தான் வாழ்க்கையின் குறிக்கோள். அந்த அது பவம் முடிந்த பிறகு அவர்கள் மீட்டும் இந்த உலகத்தில் வந்து தவம் செய்தே இறைவன் அடியைப் பெறவேண்டும். வானவர் பதவி சிறந்ததன்று. வானுலகத்தைவிடச் சிறந்தது வீடு. “வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்.” என்று வள்ளுவரும் வானவர்க்கும் மேலான ஒரு பதவியைச் சொல்கிறார். அதுதான் முடிந்த முடிபாகிய மோட்சம் என்பது. அதனை அடைவதற்கு உரியவர்கள் மனிதர்களே. இறைவனும் தன்னுடைய திருவிளையாடல்களைக் காட்டி உலகத்தார் பயன் பெறவேண்டுமென்று இந்தப் பூமியையே தன் திருவிளையாட்டு மேடையாகக் கொள்கிறான். அதுபோலவே ஆத்மாக்களும் புண்ணியம் செய்து தேவலோகத்தை அடைய வேண்டுமானாலும், ஞானம் பெற்று மோட்சத்தை அடைய வேண்டு. மானாலும் அதற்குரிய நிலைக்களமாக இந்த உலகம் உதவுகிறது. மனிதப் பிறவி பெற்றதன் பயனாக அந்தச் சீரிய நிலையை அடைய வேண்டும். "இப்பூமி சிவனுய்யக் கொள்வது' என்பர் மணிவாசகர். இந்த வகையிலும் மனிதப் பிறவி அருமையானது. இறைவனை அணுகும் முறை ஆண்டவனை அணுகுகின்ற செயலில் எத்தனையோ வேறு பாடு உண்டு. திருமுருகாற்றுப்படையில் முருகனை வழிபடுகிற மக்களில் பல வகையினரைப் பார்க்கிறோம். மலையில் இருக்கிற வேடர்கள் முருகனுக்குப் பூசை போடுகிறார்கள். விரதம் இருக்கும் முனிவர்கள் வருகிறார்கள். அந்த முனிபுங்கவர்களை முன்னிட்டுக்கொண்டு பழனியில் தேவர்கள் முருகனைப் பார்க் கிறார்கள். அங்கே மனிதர்களின் சிறப்புத் தெரிகிறது. தேவலோகத் தில் இருந்து வந்த திருமாலும், சிவபெருமானும், இந்திரன் முதலிய தேவர்களும் நேரே முருகனைப் போய்ப் பார்க்கவில்லை; பார்க்கத் துணியவில்லை. முருகன் கந்த லோகத்தில் இருந்திருந் தால் ஒருகால் அவர்கள் நேரே போய்ப் பார்த்திருப்பார்கள். ஆனால் : பூவுலகத்தில் வந்து அவனுடைய அருளைப் பெறவேண்டுமென்று நினைக்கும்போது முருகனுக்கு மிகவும் பிரியமான முனியுங்கவர் களை முன்னிட்டுக்கொண்டு செல்கிறார்கள். 44