பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறுதற்கரிய பிறவி தேவலோகத்தில் உதித்தவள் தேவயானை. அந்தப் பெருமாட்டியை முருகப் பெருமான் திருமணம் செய்து கொண்டான். தேவ யானைக்குச் செவ்வேளாகிய முருகன் நாண் கட்டினான். திருமங்கல நாண் பூட்டுவது திருமணத்தில் முக்கியமான செயல் அல்லவா? நாண் என்பது திருமங்கல்ய நாணையும், கயிற்றையும் குறிக்கும். அப்படிக் கட்டி நல்ல ஆபரணங்களை அணிவித்து, அங்குசம் கொண்டு தன்னுடைய புயமாகிய தூணில் பிணித்தான் என்று அவர் பாடுகிறார். 'சேணு தித்திடு தெய்வதக் களிற்றினைச் செவ்வேள் நாணி னிற்கட்டி நகரிடைத் தந்துநற் கலன்கள் பூணு தற்றுறும் அங்குசங் கைக்கொடு புயமாம் துணு றப்பிணித் தணைத்தனன் அருளெனும் தொடரால்." இங்கே அங்குசம் என்பது, அங்குசம் என்னும் ஆயுதத்தையும், அழகிய தனம் என்பதையும் குறிக்க வந்த சிலேடை. நெடுந் தூரத்தில் வாழ்ந்திருந்த யானையைக் கயிற்றினால் கட்டித் தன் ஊருக்குக் கொண்டு வந்தான் என்ற ஒரு பொருள் தொனிக்கிறது. குமரகுருபரர் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழில் முரு கனுடைய பன்னிரு தோள்களையும் மலைகளாகச் சொன்னவர், அந்த மலைகளில் இந்திராணி வளர்த்த யானை விளையாடுகிறது என்று பாடுகிறார். கற்பகமரத்தின் அடியில் சிவந்த கண்ணை யுடைய இந்திராணி வளர்த்த கும்பம் போன்ற நகில்களை உடைய உவகை பெற்ற தேவயானை விளையாடுவதற்குரிய பன்னிரண்டு மலைகளைப் போன்ற தோளை உடையவன் என்று பாராட்டுகிறார். "பூமேவு கற்பகப் பொங்களிற் செங்கட் புலோமசை வளர்த்தகும்பப் புணர்முலைக் களியானை விளையாடு பன்னிரு பொருப்பனை.' 1. சேண் - தேவலோகத்தில், தெய்வதக்களிறு - தேவயானை, தந்து - கொண்டு வந்து, பூணுதல் துறம் - பூணுதலை நெருங்கிய, தொடர் - சங்கிலி. 2. பொங்கர் - மரம், புலோமசை - இந்திராணி, பொருப்பனை - மலைபோன்ற தோளை உடையவன். 了9