பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லை கடந்த இன்பம் இரண்டு எல்லைகள் உயிர்க் கூட்டங்கள் இரண்டு எல்லைக்கு உட்பட்டு வாழ் கின்றன. ஒன்று தேச எல்லை அல்லது இட எல்லை; மற் றொன்று கால எல்லை. தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு, தூரம், சமீபம் என்பன இட எல்லையைக் குறிப்பிடுபவை. இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம், நூறு ஆண்டு, ஆயிரம் வருஷம், யுகம், நொடி, கணம், நிமிஷம், மணி என்பன எல்லாம் கால எல்லையைக் குறிக்க வந்த பலவகையான பெயர்கள். இந்த இரண்டும் பிரபஞ்சத்தோடு தொடர்புடைய வாழ்வு எந்த உயிருக்கு உண்டோ அந்த உயிருக்கு உண்டு. இந்த இரண்டு எல்லைகளையும் கடந்தவன் இறைவன். இறைவனோடு ஒன்று பட்ட உயிர்களுக்கும் இட எல்லை, கால எல்லை ஆகிய இரண்டும் இல்லை. இந்த உடம்பில் வாழும் மட்டும் அந்த இரண்டு எல்லைக்குட்பட்டு நாம் வாழ்கிறோம். ஆனால் இறை வனுடைய திருவருள் இருந்தால் இந்த உடம்பில் இருக்கும் போதே இரண்டு எல்லையின் நினைவும் இல்லாத ஒர் ஆனந்த அநுபவத்தைப் பெறலாம். அத்தகைய இன்ப அநுபூதி நிலையை இந்தப் பாட்டில் அருணகிரிநாதப் பெருமான் சொல்ல வருகிறார். திருவருள் தோணி பெரிய ஆற்றில் ஒருவன் இறங்கி நடந்து செல்லத் தொடங் கினான். கணுக்கால் அளவு முதலில் தண்ணீர் இருந்தது. பின்பு முழங்கால் அளவு ஆயிற்று. அதன் பின் இடுப்பளவு வந்தது. அதற்குப் பின்னால் கழுத்தளவு வந்தது. பின்பு தலை முழுகி விட்டது. ஆற்றில் ஆழம் அறியவேண்டுமென்று மேலே மிதந்தும், கீழே ஆழ்ந்தும் அவன் சென்று கொண்டே இருந்தான். ஒர் ஆள் ஆழம், இரண்டு ஆள் ஆழம் என்று கண்டுபிடித்த பின்பு க.சொ.V-7