பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எமராசன் கடைஏடு கிடைக்கும். பெரியவர்கள் செய்கிற வேள்விகள் தேவர்களுக்கு உணவாகின்றன. வானவர்களுக்கு நன்மை உண்டாக வேண்டு மென்றால் உலகத்தில் உள்ள மக்களுக்கு நன்மை உண்டாக வேண்டும். அவ்வாறே வானவர்களுடைய வாழ்வு தடைப்பட்டால் அவர்களால் கிடைக்கும் நலங்கள் உலகத்திற்கும் இல்லையாகும். வானவர்களுடைய வாழ்வு தொடர்ந்து நன்றாக நடைபெறா விட்டால் மண்ணவர்களுடைய வாழ்வும் தீங்கு அடையும். தேவர் வணங்குதல் தேவர்களுக்குப் பகைஞர்கள் அசுரர்கள். அசுரர்களில் மிக்க கொடியவனாக இருந்தவன் சூரன். மாயையின் பிள்ளையாகிய அந்தச் சூரன் தேவலோகத்தைத் தன்னுடையதாக்கிக் கொள்ள முயன்றான். அவனால் தேவர்களுக்கு உண்டான துன்பங்களுக்கு அளவு இல்லை. தம்முடைய சொந்த ஆற்றலால் அந்த அசுரனை மாய்ப்பதற்குத் தேவர்களுக்கு வழியில்லை. உலகத்தில் உள்ள மக்களுக்குத் தேவர்கள் பலவகையான அஸ்திரங்களைக் கொடுக் கிறார்கள். அற்புதங்களைச் செய்யும் அந்த அம்புகளை வைத்துக் கொண்டு மக்கள் போரிட்டார்கள். புராணங்களைப் பார்த்தால் தவம் செய்தவர்களுக்குத் தேவர்கள் பலவகையான அஸ்திரங் களை அருளியதாகக் கதை இருப்பதைப் பார்க்கலாம். வல்லமை இல்லாதவர்களுக்கு வல்லமை தரும் பல அஸ்திரங்களை வழங்கக் கூடியவர்களாகத் தேவர்கள் இருந்தாலும் சூரனை எதிர்க்கமாட் டாமல் திண்டாடினார்கள். அவர்கள் சிவபெருமானை அடைந்து தங்கள் தொல்லையைப் போக்க வேண்டுமென்று விண்ணப் பித்துக் கொண்டார்கள். அவர்களுடைய விருப்பத்தின்படி முருகப் பெருமான் திருஅவதாரம் செய்தான். முருகன் தேவர்களுடைய படைக்குத் தலைமை தாங்கினான். 'வானோர் வணங்குவில் தானைத் தலைவன்' ஆக நின்றான். அவன் சூரபன்மாவைச் சங்காரம் செய்து தேவர் களைக் காப்பாற்றினான். முருகப்பெருமானால் தமக்கு வருகின்ற நன்மையை எண்ணி அவனைத் தோத்திரம் செய்தார்கள் அமரர்கள். சூரபன்மாவை க.சொ.V1-7 101