பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 அவன் அழித்த பிறகு பின்னும் மிகுதியாகத் துதி செய்தார்கள். அவனால் தாங்கள் பெற்ற இன்பத்தை நினைந்து நன்றி அறிவும், பணிவும் மீதுாரப் பலவகையில் புகழ்ந்தார்கள். குமரா சரணம் சரணம் என்று துதித்தார்கள். ஒRடக்ஷரம் முருகப்பெருமானுடைய மந்திரங்களுள் நமோ குமாராய என்பது ஒன்று. ஆண்டவனை வழிபடுவதற்குப் பல வழிகள் உண்டு. திருக்கோயிலுக்குச் சென்று வழிபடுவது ஒரு முறை. சக்கரத்தைப் பூசிப்பது ஒருவகை. அவன் திருவுருவத்தை வைத்து நாமே மலரால் அருச்சனை செய்வது மற்றொரு வகை. அவனுடைய திருமந்திரத்தை அழகிய செப்பேட்டில் எழுதிப் பூசிப்பார்கள். அதனையே திருக்கோயிலில் விக்கிரகங்களுக்கு அடியில் போடு வதால் சைதன்யம் மிகுதியாகும் என்பது ஒரு நம்பிக்கை. இறை வனுடைய மூல மந்திரத்தை ஜபிப்பதனால் ஒருவனுக்குப் பல வகையான பயன்கள் உண்டாகும் என்பார்கள். அருணகிரிநாதர் திருப்புகழில், 'மூல மந்திரம் ஒதலிங்கிலை’ என்று இரங்குகிறார். முருகனுடைய மந்திரங்கள் பல உண்டு. அவற்றில் சிறந்தது ஷடட்சர மந்திரம். திருமுருகாற்றுப் படையில் முனிவர்கள் அதனைச் சொல்வதாக நக்கீரர் பாடுகிறார். அதன் உரையில் நச்சினார்க்கினியர், நமோ குமாராய' என்றதை ஆறெழுத்தாகச் சொல்கிறார். இப்போது நாம் பெரும்பாலும் ஜபம் செய்கிற ஷடட்சரம் வேறுவகை. சரவணபவ என்பது அது. பெரும்பாலும் மந்திரங்கள் நம: சப்தத்துடன் இருக்கும். நம: சிவாய என்ற பஞ்சாட்சரத்தில் நம: சப்தம் இருப்பதைக் காணலாம். முருகப் பெருமானுடைய மந்திரங்களில் நம: சப்தத்துடன் கூடியது நம: குமாராய என்பது. கந்தர் அனுபூதியில் அருணகிரியார், 'நாதா குமரா நமஎன்று அரனார் ஒதாய் எனஒதியது எப்பொருள்தான்?' 1C2