பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எமராசன் கடைஏடு என்னும் பாடலில் அந்த மந்திரத்தைப் பதித்திருக்கிறார். முருகப் பெருமானை ஷடட்சர மந்திரத்தைச் சொல்லிச் சிவபெருமானே வணங்கினார் என்ற காட்சியை அருணகிரியார் நமக்குக் காட்டு கிறார். நம: சப்தத்தை முதலில் வைத்துச் சொல்லுவதும், பின்பு வைத்துச் சொல்வதுமாக இரண்டுவகை உண்டு. பஞ்சாட்சரத்தில் நம: சப்தத்தை முன்பு வைத்துச் சொன்னால் தூல பஞ்சாட்சரம் என்று சொல்வார்கள். பின்பு வைத்துச் சொன்னால் ஞான பஞ்சாட்சரம் அல்லது சூட்சும பஞ்சாட்சரம் என்று சொல்வது வழக்கம். அது போலவே நம: குமாராய என்பது ஸ்தூல ஷடட்சரமானால் குமாராய நம: என்பது சூட்சும ஷடட்சரம் என்று கொள்ளலாம். பிரணவத்தின் பொருளைப் பெறுவதற்காக முருகனைப் பணிந்த சிவபெருமான் ஞானோபதேசம் பெறுகின்ற மாணாக்கனது நிலையில் இருந்தார். ஆகையால் அவர் ஞான ஷடட்சரத்தை 'குமரா நம’ என்று ஜபித்துப் பணிந்தார் என்று சொல்வது பொருத்தமாக இருக்கிறது. தேவர்கள் முருகனுடைய திருவருளால் தங்களுக்கு வந்த இடையூறுகள் களையப் பெற்றார்கள். அவர்கள் ஞான ஷடட்சரத்தை எண்ணி, குமரா சரணம் சரணம் என்று துதித்தார்கள். குமாராய நம: என்ற தொடருக்குக் குமரனுக்கு வணக்கம் என்று பொருள். அந்த மந்திரப் பொருளுடைய சொற் களைத் தேவர்கள் சொல்கிறார்கள். மகாதேவராகிய சிவ பெருமான் பணிந்து காட்டிய வழி அல்லவா? குமரா சரணம் சரணம் என்று அண்டர்குழாம் துதிக்கும் என்று அருணகிரியார் சொல்வதில் ஒரு நயம் இருக்கிறது. ஒரு முறை சரணம் என்று சொன்னால் அவர்கள் உள்ளத்தில் உள்ள உண்மையான மதிப்புப் புலனாகாது. அடுத்து அடுத்துச் சொல் வதனால் நன்றி அறிவும், பக்தியும் அவர்களுடைய உள்ளத்தில் மிகுந்திருக்கின்றன என்பது தெளிவாகும். முப்பத்து முக்கோடி தேவர்களும் ஒரே கூட்டமாகச் சென்று தம்முடைய நாட்டைத் 1C3