பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 தமக்கு வாங்கித் தந்த முருகப் பெருமானை வணங்கித் துதிக் கிறார்களாம். அண்டர் குழாம் துதிக்கும் அமராவதியில் பெருமாள் என்று அருணகிரிநாதர் பாடுகிறார். அமராவதியில் பெருமாள் உலகம் என்றும் காணாத பெரும் போரில் தேவர்களுடைய படை வலியிழந்து நிற்க, அவற்றுக்கு எல்லாம் ஊக்கமூட்டித் தானே தனித் தலைவனாக நின்று போர் செய்து தேவர்களுக்கு வெற்றியை உண்டாக்கினான் முருகன். இந்திரன் பேருக்கு அரசனே யொழிய உண்மையில் எல்லாவற்றிற்கும் தனித் தலைவனாக இருக்கிறவன் முருகன்தான். இந்திர லோகம் முழுவதும் தன் னுடைய ஆணையைச் செல்லவிட்டுப் பாதுகாக்கும் பேரருளாளன் அவன் என்பதை அமரர்கள் உணர்ந்தார்கள். தம்முடைய நன்றி அறிவை வெளியிட்டுக் கொள்ளவேண்டுமென்று தேவசேனையைத் திருமணம் செய்வித்தார்கள். அவனைத் தம்முடைய ஊருக்கு அழைத்து வந்து பலவகையான உபசாரம் செய்து வழிபட்டார் கள். அமராவதியின் தலைவன் இந்திரன் என்று சொன்னது சூரபன்மன் தோன்றுவதற்கு முன்னாலே பொருத்தமாக இருக்க லாம். முருகப் பெருமானின் துணை வலியினால்தான் இன்று இந்திரன் அமரலோகத்தை ஆளுகிறான். உண்மையில் அமர லோகத்திற் கதிபதி முருகன் என்றே சொல்லவேண்டும். அதனை நினைந்து, அமராவதியில் பெருமாள் என்று அருணகிரிநாதர் பாடுகிறார். அமராவதி என்பது தேவ லோகத்தின் தலைநகர் சூரனால் உண்டாகும் பயத்தை மாற்றித் தேவர்களுக்குரிய அரசை வாங்கித் தந்த அமராவதியிற் பெருமாளாகிய முருகன் உலகத்தில் உள்ள மக்களுக்கு வேறு ஓர் அரசை வாங்கித் தருவான். தேவர்களுக்குக் கொடுப்பதற்கு அரியதும், தேவ லோகத்திற்கு அப்பாற்பட்டது என்று பெரியவர்கள் சிறப்பித்துப் பேசுவதுமாகிய மோட்சலோகத்தைத் தன்னுடைய அடியார்களுக்கு 104