பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 'ஏமாப்போம் பிணியறியோம் இனைவோ மல்லோம்' என்று பெருமிதத்துடன் திருநாவுக்கரசர் பாடினார். அவர் இறை வனுடைய திருவருளில் திளைத்த ஞானத் தபோதனர். உலகம் முழுவதும் இறைவன் திருவருளால் நடைபெறுவது என்று கண்டு உலகத்தில் உள்ள உயிர்களிடத்தில் எல்லாம் தயை உடை யவர்களாக வாழ்பவர்கள் ஞானத் தபோதனர்கள். எம்பெரு மானுடைய ஆறுமுகமும் கண்ட தபோதனர்கள் உயிர்களை எல்லாம் அந்தப் பெருமானுடைய குழந்தைகளாகப் பார்த்து அவற்றின்பால் மாறாத அன்பு செய்வார்கள். திருநீறு இடும்போது கூட ஆறுமுகம் ஆறுமுகம் என்று சொல்வார்கள். ஆறுமுகம் என்று ஆறு முறை சொல்லித் திருநீறு இடுகின்ற இயல்பு முருகன் அடியார்களிடம் இருப்பது என்று ஒரிடத்தில் அருண கிரியார் பாடுகிறார். “ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி ஆகமணி மாதவர்கள்' என்பது அந்தப் பாட்டு. யமன் சீட்டு ஆண்டவனுடைய ஆறுமுகத் தத்துவத்தை உணர்ந்து தரிசித்த இந்த ஆத்ம பந்துக்கள் காலனைப் பற்றிய அச்சம் சிறிதும் இல்லாதவர்கள். மற்றவர்களுக்குச் சீட்டு அனுப்புவதைப் போல இந்த அடியார்களைக் கொண்டு வருவதற்கு யமன் சீட்டு அனுப்பினால் அது செல்லாது. எமராசன் விட்ட கடையேடு வந்து இனி என்செயுமே? யமன் ஒவ்வொருவனுடைய வாழ்க்கைக் கணக்கையும் வைத்திருக்கிறான். எப்போது அவனுடைய ஆயுள் முடிகிறதோ அப்போது ஆளையும் சீட்டையும் அனுப்புவான். அவன் அனுப்பு கிற சீட்டைக் கடையேடு என்று அருணகிரியார் சொல்கிறார். கடைசியில் அனுப்புகிற சீட்டு என்று பொருள். அமராவதியிற் பெருமாளுடைய திருவருளை நம்பி அவனுடைய ஆறுமுகத்தைத் தரிசித்து அவற்றின் தத்துவத்தை உணர்ந்து வாழ்கின்ற தபோ தனம் உடையவர்களிடத்தில், யமன் பெரிய அரசனாக இருந் iO3