பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 களுடன் பழகினால் எண்ணுதற்குரிய நல்லவைகள் இன்ன என்பது தெரியவரும். நல்லவற்றைச் செய்வதற்கு முன்னால் நல்லவற்றை நினைக்கவும், பேசவும் தெரிந்து கொள்வதே சிறந்த சாதனை. பணத்தை வைத்துக் கொண்டு, உடல் பலத்தை வைத்துக் கொண்டு, மக்கள் துணையை வைத்துக் கொண்டு நல்ல காரியங்கள் செய்ய வேண்டும்; அதற்கு நமக்கு வாய்ப்பு இல்லை யென்று எண்ணிப் பலர் சோர்ந்து போகிறார்கள். எடுத்தவுடன் மனிதன் செயலில் இறங்குவது இல்லை. மனத்திலே எண்ணி, பல காலம் சிந்தித்து, அதனை நிறைவேற்றுவதற்கு என்ன வழி என்று ஆலோசிக்கிறான். அதைப்பற்றி மற்றவர்களுடன் பேசு கிறான். அதன் பின்னே அதனைச் செய்வதற்குரிய கருவிகளைத் தேடுகிறான். மனத்தில் எத்தனை திண்மையான எண்ணம் இருக் கிறதோ அதற்கு ஏற்றபடி செயலை நிறைவேற்றுவதற்குரிய வகை தானே வந்து சேரும். 'எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர் திண்ணிய ராகப் பெறின்' என்று வள்ளுவர் கூறுகிறார். எண்ணத்தில் திண்மை இருந்தால் வேண்டிய கருவிகள் தாமே வந்து சேரும். பெற்ற கருவிகள் உண்மையைச் சொல்லப் போனால், நாம் இப்போது எத்தனையோ கருவிகளைப் பெற்றிருக்கிறோம். அவற்றைத் தக்க வண்ணம் பயன்படுத்திக் கொள்ளாமல் போவதனாலேயே நாம் வெற்றி காண்பது இல்லை. கிடைத்த பொருளைக் கொண்டு பெறத்தக்க பெரும் பயன் இருக்கவும் அதனை மறந்துவிட்டுக் கிடைக்காத பொருளுக்கு ஆசைப்பட்டு நிற்கிறோம்; அதற்கேற்ற கருவிகள் இல்லையே என்று வருந்துகிறோம். இறைவன் நமக்குக் கொடுத்திருக்கிற கருவிகளுக்குள் மிகச் சிறந்தது அறிவு. தனுகரண புவன போகங்கள் ஆகியவை விலங்குகளுக்குக் கிடைக்காத வகையில் நமக்குக் கிடைத்திருக்கின்றன. அவற்றை வைத்துக் கொண்டு சரியானபடி முயற்சி செய்து நல்ல பயனை அடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. 'பெறுதற்கரிய பிறவி' என்று மனிதப் பிறவியைச் சொல்வதற்குக் காரணம் இதுதான். இவ்வளவு இருந்தும் நாம் அந்தக் கருவிகளைச் சரியானபடி 112