பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 வேல் கண்ட வெற்றி அசுரர்களைப் போர்க்களத்தில் அந்த வேலாயுதம் கொன்றது. அசுரர்கள் ஊனை உணவாக உடையவர்கள். ‘பிசிதர்' என்று அருணகிரியார் சொல்லுகிறார். அவர்கள் ஊனை உண்பவர்கள் ஊனை உண்ணும் வாயிலிருந்து நிணம் கக்குகிறதாம். வேல் அவர்களுடைய வாய்களை இரத்தமும் ஊனும் கக்கும்படி செய்கிறது. பிசிதர்தம்வாய் நிணம் கக்க. ஊன் உணவை உண்ணுகிறவர்களை அசுரர்களாகச் சொல்ல வேண்டும் என்பது அருணகிரியார் கருத்து. அசுரர்களை வேறு சொல்லால் கூறாமல் 'பிசிதர்' என்று சொல்வதைக் கவனிக்க வேண்டும். தாம் உண்ட ஊன் உணவைக் கக்குவது போல, வேல் வாயைக் கிழித்துப் புண்படுத்தி நிணத்தைக் கக்கும்படி செய் கிறதாம். அவர்கள் உடம்பு சிதைந்து, குலைந்து போர்க்களத்தில் வீழ்ந்தமையால் பலருக்குக் கொண்டாட்டம் உண்டாகிறது. பிறரைக் கொன்று அதனால் கொண்டாட்டத்தை நடத்திய அரக்கர் கள் இப்போது உயிர்விட்டுப் போர்க்களத்தில் கிடக்கிறார்கள், அவர்களுடைய திண்ணடாட்டத்தால் உலகில் உள்ள உயிர்கள் கொண்டாட்டம் அடைகின்றன, அமரர்கள் வெற்றி பெற்றதை இப்போது அருணகிரியார் சொல்லவில்லை. அதற்கு முன்பு சில பிராணிகளுக்கு உண்டான ஆனந்தத்தைச் சொல்ல வருகிறார். போர்க்களத்தில் அசுரர்களுடைய உடல்கள் துண்டு பட்டுக் கிடக்கின்றன, சாமானிய உடல்போல் இல்லாமல் மலைபோல் இருக்கிற அசுரர்கள் பிணமாகக் கிடக் கிறார்கள், சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தலைகள். யானைத் தலை, சிங்கத்தலை என்று பல்வேறு தலைகளை உடையவகளாக அவர்கள் வீழ்ந்து கிடக்கிறார்கள். மயானத்தில் காக்கையும் கழுகும் வந்து ஊனைக் கொத்தித் தின்னும். பிணம் உள்ள இடத் தில் அவை விருந்தயரும். இங்கும் காக்கையும் கழுகும் பந்த லிட்டுப் பறக்கின்றன. நான் முந்தி, நீ முந்தி என்று பிணங்கு கின்றன, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அசுரர் களுடைய 116