பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 வார்த்தைகளில் எத்தனையோ உண்மைகளைக் காணலாம். வந்தவர் பாரமார்த்திகத் துறையில் அடியெடுத்து வைத்து அநுபவம் சிறிது வாய்ந்தவரானால், வந்தவரிடம் தம்முடைய அநுபவங்களையும் சொல்ல முற்படுவார். அப்போது அவருடைய பேச்சில் உரம் ஏறும்; சாரம் மிகும். அவர் கண்ணின் ஒளி அப்போது விட்டு விளங்கும். திடீர் திடீரென்று சிரிப்பார். சிரிக்கும் போதே கண்ணிர் வரும். கண்ணிரும் களிப்பும் ஒருங்கே பொங்குவதைத் தெளிவாகக் காணலாம். - அவரைப் பக்தர் என்றும் சொல்லலாம்; ஞானி என்றும் கூறலாம். இரண்டும் ஒன்றுதான் என்பதைக் காட்டும் துறவி அவர். ஆம், அவர் துறவிதான். அவருக்குக் குடும்பம் இல்லை. சாதி இல்லை. குலம் இல்லை. சமயம் இல்லை என்றுகூடச் சொல்லிவிடலாம். அடிக்கடி முருகா என்று சொல்வார். ஆனால் அபிராமி அந்தாதியைப் பாடிக் களிப்பார். திவ்வியப் பிரபந்தத்தைப் பாடி இன்புறுவார். தேவாரத்தில் திளைப்பார். அலங்காரமும் அநுபூதியும் அவருக்கு மிகவும் விருப்பமானவை. நல்ல பாட்டு, நல்ல இயற்கைக் காட்சிகள், நல்ல ஒவியம், நல்ல மனிதர்கள் - அவருக்குப் பிடித்தமானவை இவை. * வெவ்வேறு மூர்த்திகளைப் பற்றிய பாடல்களில் ஒரே மாதிரி உள்ளத்தைப் பதிக்கும் இயல்பு விசித்திரமாகத் தோற்றலாம். ஆனால் அவர் பார்க்கும் பார்வையே வேறு. பாடல் யாரைக் குறிக்கிறது என்று அவர் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. பாடினவர் நிலை என்ன? அவர் தம் அநுபவ நிலையை எவ்வாறு பாட்டில் காட்டியிருக்கிறார் என்பதைப் பார்க்கிறவர் அவர். அதனால் ஆழ்வார் பாடலும், அபிராமிபட்டர் பாடலும், மணிவாசகர் பாடலும், அருணகிரிநாதர் பாடலும் ஒரே அனுபவத்தை வெவ் வேறு வகையாகச் சொல்கின்றன என்ற உண்மையை அவர் உணர்கிறார். அவர் இறையருளநுபவத்தில் ஆழ்ந்தவர்; ஆனால் குழந்தை போன்ற எளிமையுள்ளவர். எதிலும் ஒளிவு மறைவின்றிப் பேசு கிறவர். நாம் எதைக் கேட்டாலும் தெரிந்தால் தெளிவாகச் சொல் வார். தெரியாவிட்டால் தெரியாது என்று நேர்மையாகச் சொல்வார். பலகாலம் தவத்தில் ஈடுபட்டு அநுபவம் பெற்று அதனால் தெளிவுடையவராக விளங்குகிறார் அவர். i22