பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை வள்ளி நாயகி செந்நிறம் பெற்ற மானுக்கு மகளாகத் தோன் றினாள் (3); ஆதலின் செம்மான் மகள் என்று அப்பெரு மாட்டியைக் குறிக்கிறார். அவளுக்காக முருகன் ஏங்கினான். தினைப்புனத்தில் கிளிபோல அமர்ந்து காவல் புரிந்தாள் (6): ஆதலின் தெள்ளிய ஏனலிற்கிள்ளை என்றும் கள்ளச் சிறுமி என்றும் வள்ளிநாயகியைக் குறிக்கிறார். அடியார்கள் முருகனை நாடி அடைந்து புரியும் தொண்டு வகைகளை இப் பாடல்கள் சில இடங்களில் சொல்கின்றன. அடியார்கள் அவன் உள்ள தலத்துக்குச் சென்று கண்டு தொழுவார்கள், கண்ணால் அவன் திருவுருவ அழகைக் கண்டு, நமக்கு நாலாயிரம் கண் இல்லையே! என்று வேசாறுவார்கள் (2); அவனை வாழ்த்துவார்கள் (3); அவனுடைய திருவடியை லட்சிய மாகக் கொண்டு அதை வேட்பார்கள் (6); அது புண்டரிக மலரைப் போலப் பொலிவு பெற்றிருப்பதைக் கண்டு இன்புறு வார்கள். பின்னும் அண்டி நெருங்கி அப்புண்டரிகத் தாள் தண்டையை அணிந்து அழகு பெறுவதை உணர்ந்து மகிழ் வார்கள். அதன் அழகை மொண்டு அது ஞானமயமாக இருப்பதை உணர்வார்கள். அப்பால் அதனையே உண்டு சுத்த ஞானமாகிய ஆனந்த நிலையில் ஒன்றுவார்கள். முருகனுடைய தாள் வேட்டவருக்குக் காமத்தால் துயரம் இல்லை; பிறவித்துன்பம் அறும்; என்றும் இன்பமயமான வீட்டுலக வாழ்வு கிடைக்கும் என்ற கருத்துக்களையும் இந்தப் பாடல்களில் காணலாம். தமிழ்ச் சொற்களோடு வடசொற்களையும் விரவுவித்துப் பாடும் இயல்புடையவர் அருணகிரிநாதர். இப் புத்தகத்தில் வரும் பாடல்களில், அண்டம், ஆகுலம், உலகம், கிரி, சண்டம், சுத்தம், சூர், ஞானம், தண்டம், தரு, தெய்வம், தேவன், நித்திலம், பங்கேருகன், புண்டரிகம், பூகம், மண்டலம், முகன், மேதினி, வாவி, வித்தாரம் என்னும் வடசொற்கள் வந்தது காண்க. பட்டோலையில் கணக்கு எழுதுதல், குற்றம் செய்தாரை விலங்கு பூட்டித் தண்டித்தல், இரண்டு விலங்கு பூட்டுதல், காதல் மடந்தையைக் களவாக எடுத்து வருதல், கொடியைக் கையிற் பிடித்தல், படைகளால் மண்டலமிட்டுச் சூழ்தல், அச்சத்தால் 13 i