பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு விலங்கு பிறப்பும் இறப்பும் மனிதனுடைய வாழ்வின் எல்லைகள் இரண்டு. ஒன்று பிறப்பு, மற்றொன்று இறப்பு. வாழ்க்கை என்று சொல்வதே பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்டது. இறப்பு, பிறப்பு என்பன உடம்பைச் சார்ந்தன. ஆனால் அவற்றால் வரும் துன்பங்கள் உடம்போடு கூடிய உயிரைச் சார்ந்துள்ளன. இந்த இரண்டையும் நோய் என்று சொல்வார்கள். பிறப்பு உண்டானால் இறப்பும் நிச்சயம் உண்டாகும். பிறப்பினால் தோன்றி வளர்கின்ற உடம்பு அழிவது இறப்பாகும். மலபாண்டமாகிய இந்த உடம்பு நெடுங்காலம் இருக்குமென்றும், இதனை வைத்துக்கொண்டு இறவாத வாழ்வு வாழலாம் என்றும் சொல்வது வெறும் கற்பனையே. தோற்றம் உண்டேல் ஒடுக்கம் உண்டு என்பது ஒரு நியதி. பிறந்தவர்கள் மீட்டும் பிறக்காமல் இருக்கும் நிலையை அடைவதுதான் முத்தி என்பது. சரீரத்தின் தொடர்பு இல்லாமல் இருக்கிற நிலையே முத்தி எனப்படுவது. எப்போதும் உயிரானது உடம்போடு சேர்ந்துதான் இருக்கும்; அல்லது இறைவன் திருவடி யில் ஒன்றி இருக்கும். உடம்புகள் மூன்று என்பதும், பிறப்பி னால் புற உடம்பாகிய ஊன் உடம்பு உண்டாகிறது என்பதும், எல்லாக் காலத்தும் உயிரானது உடம்போடேயே இருக்கும் என் பதும் முன்னாலே நாம் அறிந்தவை. உடம்பின் தொடர்பு இல்லா மல் விடுபட்டு உயிர் இறைவனோடு ஒன்றுபட்டு வாழ்வதே முத்தியின்பமாகும். பிறப்பும், இறப்பும் தொடர்ந்து வருவன. இறப்பு உண்டான வுடன் மீட்டும் அந்த உயிரானது வேறு புற உடலை எடுத்துக் கொள்ளும். இடைப்பட்ட காலத்தில் சூட்சும உடம்போடு நின்று இன்ப துன்பங்களை அநுபவிக்கிறது. அவற்றையே நரக சொர்க்கப் க.சொ.VI-9