பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 என்று சொல்வார்கள். அந்த உடம்பை யாதனா சரீரம் என்று சொல்வது வழக்கம். எப்படியும் உடம் போடு நின்று உயிர் அநுபவத்தைப் பெறுகிறது. பரு உடலோடு இருக்கிற வாழ்வே நமக்குப் பிரத்தியட்சமாகத் தெரிகிறது. இந்த வாழ்வின் தொடக் கத்தைப் பிறப்பு என்றும், முடிவை இறப்பு என்றும் சொல் கிறோம். பிறப்பு, இறப்பு ஆகிய இரண்டும் போக வேண்டு மானால் மெய்ஞ்ஞானம் வரவேண்டும். ஆண்டவனுடைய திரு வருளால் பெறுவது அது. இந்த உலகத்தில் உணவு இன்மை, சுகம் இன்மை முதலிய வற்றால் பெறும் துன்பங்களை ஒரளவு நம்முடைய முயற்சியால் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் பிறப்பு இறப்புத் துன்பங்களை மாற்றுவதற்கு இறைவன் திருவருள் அவசியம் வேண்டும். அவ னுடைய திருவருளால் மெய்ஞ்ஞானம் உண்டாக, அதன் பய னாகப் பிறப்பு, இறப்பு நீங்க வேண்டும். கடவுளின் பெருமையைச் சொல்லும்போது அவன் பிறப்பையும், இறப்பையும் நீக்குகிற வன் என்பதைப் பல பெரியவர்கள் குறிப்பித்திருக்கிறார்கள். 'பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவ னடிசேரா தார்’ என்பது திருக்குறள். அருணகிரிநாதப் பெருமான், முருகனை வணங்கினால் யம பயம் இல்லாமல் போகும், மரணத்தினால் உண்டாகும் துன்பம் அடியோடு ஒழியும் என்ற உண்மையைப் பலபல உருவங்களில் சொல்லியிருக்கிறார். முன்பு அலங்காரப் பாடல் பலவற்றில் இந்தக் கருத்து அமைந்திருப்பதைப் பார்த்திருக்கிறோம். அவனுடைய திருவருளினால் பிறப்புத் துன்பம் ஒழியும் என்பதை இப்போது சொல்ல வருகிறார். அலங்காரமாக அந்த உண்மையைச் சொல் கிறார். அதிகாரிகள் பிறப்பு, இறப்பு ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளும் நமக்கு நிகழ்கின்றன. இந்தத் தொழில்களை நடத்துகிறவன் ஆண்டவன். அவன் ஐந்தொழில் உடையவன். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அளித்தல் என்பவை அந்த ஐந்தொழில்கள். அந்த 134