பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு விலங்கு ஐந்து தொழில்களும் இறைவனுடைய ஆணையால் நிகழ்கின்றன. அவன் இந்த ஐந்தையும் ஐந்து அதிகாரிகளைக் கொண்டு நிகழ்த்து கிறான் என்பது புராண வரலாறு. மிகச் சிறந்த அதிகாரி ஒருவன் தான் செய்கின்ற காரியங்களைப் பல பணியாளர்களை வைத்துக் கொண்டு செய்வது வழக்கம். எத்தனைக்கு எத்தனை உயர்ந்த நிலையில் அதிகாரி இருக்கிறானோ அத்தனைக்கு அத்தனை அவனுக்குக் கீழே பல துணை அதிகாரிகளும், ஏவலாளர்களும் இருப்பது இயற்கை. அதுபோல மூல சக்தியாக எழுந்திருக்கிற கடவுளுக்குத் துணையாகப் பல சக்திகள் உள்ளன. எல்லாம் ஒருவனாலே நிகழ்வன என்றாலும், உலக இயலை எண்ணி, அவன் ஆணையைச் செயலாற்றுகின்ற சிறுசிறு சக்திகள் இருப்ப தாக நினைந்து, அந்த அந்தச் சக்திகளுக்கு உருவம், பணி, பெயர் முதலியன வைத்துப் போற்றுகிறார்கள். அந்த வகையில் இறப்பைத் தருபவன் யமன் என்றும், பிறப்பைத் தருபவன் பிரமன் என்றும் சொல்வது மரபாக இருக்கிறது. இந்த இரண்டு பேருக்கும் தலை வனாக இருப்பவன் ஆண்டவன். யமன் என்ற கற்பனை எவ்வாறு எழுந்தது என்பதைப் பற்றியும், யமனுடைய இயல்புக்கும் இறப் புக்கும் உள்ள தொடர்பு பற்றியும் பலமுறை சிந்தித்திருக்கிறோம். பிரமன் பிரமன் என்ற வடிவத்தில் பிறப்பைத் தரும் சக்தியை அமைத்திருக்கிறார்கள். படைத்தல் என்பது ஒரு பேராற்றல். அதற்கு இன்றியமையாதது அறிவு. பணம் உள்ளவன் ஏதேனும் ஒன்றைப் படைக்க வேண்டுமானால் அறிவில் வல்லவர்களைக் கொண்டுதான் படைக்க முடியும். அறிவு உள்ளவன் பணத்தைத் திரட்டிக் கொண்டு வேலை செய்ய ஆற்றல் உள்ளவனாக இருக் கிறான். வெறும் பணம் உள்ளவனோ அறிவு இல்லாவிட்டால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. படைப்புத் தொழிலைக் கொண்ட பிரமன் பேரறிவாளனாக இருக்க வேண்டும். இதனை எண்ணியே அவன் எப்போதும் வேதத்தை ஒதுகிறான், அவன் தன் நாக்கில் கலைமகளை வைத்திருக்கிறான் என்று புராணக் கதை சொல் கிறது. வேதம் என்பது விதிப்பன விதித்து விலக்குவன விலக்கு வது. நம்முடைய நாட்டில் பிற நூல்களுக்குக் கிடைக்காத பெருமை வேதத்திற்குக் கிடைத்திருக்கிறது. அதை அபெளருஷேயம் i35