பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 என்றும், அநாதி என்றும் போற்றுகிறார்கள். இறைவனுடைய திருவாக்கே வேதம் என்று சொல்வார்கள். பல ஆயிரம் ஆண்டு களாகக் காது வழியாகக் கேட்டு ஸ்வரம் மாறாமல் வேதம் இந்த நாட்டில் நிலவி வந்திருப்பதே ஆச்சரியங்கள் எல்லாவற்றிலும் பெரிய ஆச்சரியம். பிரமன் வேதத்தில் வல்லவன் ஆதலின் அவனை வேதியன் என்றும் சொல்வார்கள். எல்லாப் பொருளை யும் தத்துவத்தையும் உணர்ந்து படைக்க வேண்டி இருப்பதால், அவனுக்கு வேத அறிவு நிரம்ப வேண்டியிருக்கிறது. அதுமாத் திரம் அன்று. எல்லாக் கலைகளுக்கும் தலைவி, எல்லா வித்தை களுக்குமுரிய சக்தி கலைமகள் என்று போற்றுகிறோம். அந்தக் கலைமகள் பிரமனுடைய மனைவி. அவள் அவன் நாவில் இருக்கிறாள். வேத அறிவோடு கலை அறிவும் உடையவன் என்ற குறிப்பைத்தான் இந்த வரலாறு காட்டுகிறது. அறிவுச் செல் வத்தை உடையவன் பிரமன், ஆக்கும் திறத்தை அறிந்தவன், விதிக்கும் முறையை உணர்ந்தவன் என்ற இயல்புகளை அவனைப் பற்றிய வருணனைகள் நமக்கு விளக்குகின்றன. சிவபெருமான் இரண்டையும் போக்குதல் இறைவனுடைய திருவருளைப் பெற்றவர்களுக்குப் பிரம னிடத்தில் அச்சம் இராது. யமனிடத்திலும் அச்சம் இராது. பிரமனுக்கு வேலை கொடுப்பதும் அவர்களளவில் நின்றுவிடும். யமனுக்கு வேலை கொடுப்பதும் நின்றுவிடும். பரஞ்சோதியாக இருக்கும் கடவுள் இறப்பும், பிறப்புமாகிய துன்பங்களினின்றும் அடியார்களைக் காப்பாற்றுகிறான் என்ற உண்மையைப் புராணக் கதைகள் வெவ்வேறு வகையில் சொல்கின்றன. சிவபெருமான் ஆருயிர்களுக்கு இறப்பையும், பிறப்பையும் போக்குகிறவன். இந்த உண்மையையே அவனுடைய கையும் காலும் காட்டு கின்றன. சிவபெருமான் தன்னுடைய கையில் பிரம கபாலத்தை வைத்திருக்கிறான். பிரமன் நம்முடைய தலையில் எழுதுகிறான்; நமக்குப் பிறப்புத் துன்பத்தை உண்டாக்குகிறான். ஆனால் சிவ பெருமான் அந்தப் பிரமனுடைய தலையையே திருப்பிக் கையில் வைத்திருக்கிறான். பிரமனால் வரும் துன்பம் இப்பெருமானுடைய அடியார்களுக்கு இல்லை என்று சொல்வது போல அவன் கையில் அந்தக் கபாலம் விளங்குகிறது. கபாலியின் திருவருள் 136