பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 தனிவேல் எடுத்துப் பொங்கோதம் வாய்விடப் பொன்னஞ் சிலம்பு புலம்ப வரும் எங்கோன் அறியின் இனி நான்முகனுக்கு இரு விலங்கே 'முப்பத்து முக்கோடி அமரர்களுக்குப் பகையாக வந்தவர் களையே அழிக்கும் பெருமான் எனக்குத் துணையாக இருக்கும் போது பிரமனால் எனக்கு என்ன தீங்கு நேரப் போகிறது?" என்று தைரியத்தோடு பேசுகின்றார். கடுமையான தண்டனை அந்தப் பெருமான் இதை அறிந்தால் சும்மா இருப்பானா? முன்னாலே ஒரு முறை பிரமன் தனக்குத் தீங்கு செய்தான் என்று அவனுக்குத் தண்டனை அளித்தான்; செருக்கினால் வணங்காமல் சென்றான் என்பதற்காகத் தலையில் குட்டிக் காலில் தளை யிட்டான். இப்போதோ பழைய தண்டனை மாதிரி அல்ல; இன்னும் கடுமையாகத் தண்டனை தருவான். எங்கோன் அறியின் இனி நான்முகனுக்கு இருவிலங்கே. முன்பு ஒரு விலங்கு காலில் பூட்டினான்; இப்போது அதே காலில் இரட்டை விலங்கு போடுவான் என்று பொருள் கொள்ளக்கூடாது. மீண்டும் தவறு செய்தால் அவனுக்குக் கடுமையான தண்டனை விதிக்க வேண்டும். ஆகவே முன்பு ஒரு விலங்கு போட்டான்; இப்போது இருவிலங்கு போடுவான். இங்கே இருவிலங்கு என்றால் காலிலும், கையிலும் போடும் விலங்கு என்று கொள்ள வேண்டும். தனக்குத் தவறு செய்தால் ஒரு பங்கு தண்டனை கொடுப் பவன் அடியார்களுக்குச் செய்த பிழைக்காக இரண்டு பங்கு தண்டனை செய்வான். தனக்குச் செய்கிற அபசாரத்தைக் காட்டி லும் தன் அடியார்களுக்குச் செய்கிற அபசாரத்திற்காகப் பின்னும் கடுமையாகத் தண்டிப்பான். ஆதலால் முன்பு பிரமன் தனக்குச் செய்த தீங்கை உணர்ந்தபோது ஒரு விலங்கு போட்டவன்; தன் அடியார்களுக்குச் செய்த தீங்கை உணர்ந்தால் இரட்டை விலங்கு போடுவான். அப்போது தன்னைக் காணாமல் நடந்த காலுக்கு விலங்கு போட்டான். இப்போது அந்த விலங்கோடு பட்டோலை யில் எழுதிய கைக்கும் சேர்த்து இரட்டை விலங்காகப் போடு வான். காலுக்கும் கைக்கும் விலங்கு போடுவது உலக வழக்கம். | 44