பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 (தாமரையில் இருக்கும் பிரமன் என்னைப் பிறவி எடுப்பவர்களின் கணக்கில் ஒருவனாக ஒலையில் எழுதுவதற்கு, அவன் பழங்காலத்தில் முருகன் தன் காலில் விலங்கிட்டதை நினைக்கவில்லையோ? அவன் அதை மறந்து பட்டோலையில் இடுவதை, ஒப்பற்ற வேலாயுதத்தை ஏந்திப் பொங்கும் கடல் வாய்விட்டு அரற்றவும் பொலிவுபெற்ற கிரெளஞ்ச மலை புலம்பவும் எழுந்தருளும் எம்முடைய தலைவனாகிய முருகன் அறிந்தால், இனிமேல் பிரமனுக்கு முன்பு போட்ட ஒரு விலங்கன்றி இரண்டு விலங்கு இடப்பெறும். பட்டோலை-கணக்கு முதலியன எழுதும் ஒலை. அறிந்திலனோ - எண்ணவில்லையோ, தனி - ஒப்பற்ற. ஒதம் - கடல். வாய்விட - ஒலிக்க. வாய்விட, புலம்ப, எடுத்து, வரும் எங்கோன் என்க. பட்டோலையில் இட என்பது இடுவதாக இருந்தால் என்னும் பொருளுடையது) இது கந்தர் அலங்காரத்தில் 89ஆவது பாட்டு. 146