பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 அவரிடம் ஒரு பாத்திரத்தைக் கொடுத்து, "நீங்கள் போய்ப் பால் வாங்கி வாருங்கள் என்று சொன்னாள். அந்தப் பாத்திரம் சிறிய தாக இருந்தது. 'இதற்குமேலே கொடுக்கப் போகிறாரா?' என்ற எண்ணத்தினால் அதைக் கொடுத்து அனுப்பினாள். அவளுடைய கணவன் குறிப்பிட்ட இடத்தைத் தேடி அந்தச் செல்வரைக் கண்டான். அங்கே பலர் பாலை வாங்கிக் கொண்டிருந்தார்கள். எத்தனை கேட்டாலும் இல்லை என்னாமல் அந்தச் செல்வர் பாலைக் கொடுத்துக் கொண்டிருந்தார். முன்னே போனவர்கள் கூட்டம் கூட்டமாகப் பாலை வாங்கிக் கொண்டிருந்தார்கள். இவனோ கையில் ஒரு சின்னச் செம்பைக் கொண்டுபோய் இருந் தான். அங்கே நிகழும் நிகழ்ச்சியைக் கண்டபோது, 'அடடா, நம்முடைய மனைவி நம்மிடத்தும் ஒரு பெரிய குடத்தைக் கொடுத்து அனுப்பாமல் போனாளே! என்ன பைத்தியக்காரத் தனம்?' என்ற எண்ணம் உண்டாயிற்று. 'இந்தச் சிறிய செம்பு நிறையத்தானே வாங்கமுடியும்? பெரிய அண்டாவைக் கொண்டு வந்திருக்கலாம் போலே இருக்கிறதே' என்று அந்த மனிதன் எண்ணினான். அது போன்ற ஓர் எண்ணத்தை இந்தப் பாட்டில் அருணகிரியார் வெளியிடுகிறார். திருச்செங்கோடு பலகாலமாகத் திருச்செங்கோட்டுப் பெருமான் பெருமையைக் காதால் கேட்டு உணர்ந்தவர் அவர். செங்கோடு என்பதற்குச் செங்குத்தான மலை என்று பொருள். கொங்கு நாட்டில் சேலம் மாவட்டத்தில் இருக்கிறது அது. அதைப்பற்றி ஒரளவு முன்பே தெரிந்து கொண்டிருக்கிறோம். அருணகிரிநாதப் பெருமான் அந்தத் தலத்தில் எழுந்தருளியிருக்கும் வடிவேற் பெருமானைப் பற்றிப் பலர் வாயிலாகக் கேட்டிருந்தார். அங்கே முருகப்பெருமான் தன் திருக்கரத்தில் வேலை ஏந்திய கோலத்தில் நிற்கிறான். பெரும்பா லான இடங்களில் முருகனுடைய திருவுருவத்தில் வேலைத் தனியே சாத்துவார்கள். ஆனால் அங்கே மூல உருவத்திலேயே, திருக்கையில் வேலைப் பிடித்த கோலத்தில் ஆண்டவன் எழுந் தருளியிருக்கிறான். ஆகையால் செங்கோட்டு வேலன் என்ற வழக்கு இருக்கிறது. அந்தப் பெருமான் கண்கொள்ளாப் பேரழகன் என்பதைப் பலர் வாயிலாகக் கேட்டு, அங்கே போய் ஆண்டவனைத் i48