பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 காப்பாற்றவேண்டி எட்டுக் குணங்களை உடையவனாக எழுந் தருளியிருக்கிறான். கூட்டில் அடைபட்டிருக்கிற கிளியைக் காப் பாற்ற மற்றொரு கிளி கூட்டிலே அடைபட்டு வருவது போல, முக்குணங்களினாலான கூண்டில் அடைபட்டிருக்கிற நம்மை உய்விக்க ஆண்டவன் எண்குண பஞ்சரத்துள் அடைபட்டவனைப் போல வருகிறான். 'என்குண பஞ்சரனே' என்று கந்தர் அநுபூதியில் பாடுவார். படமும் மங்கையும் ஒரு பையன் திருநெல்வேலியில் இருக்கிறான். அவனுக்குக் கல்கத்தாவில் இருக்கிற பெண்ணைத் திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று பெரியவர்கள் முயற்சி செய்கிறார்கள். கல்கத்தா விற்குச் சென்று பெண்ணைப் பார்ப்பதற்கு ஒய்வு கிடைக்கவில்லை. ஆகையால் முதலில் பெண்ணைப் பெற்றவர்கள் அந்தப் பெண் னின் படத்தை அவனுக்கு அனுப்புகிறார்கள். அந்தப் படத்தைக் கண்டு அவள் குட்டையும் அல்ல, நெட்டையும் அல்ல; நடு உயரம்; மூக்கும், விழியும் எடுப்பாக இருக்கின்றன என்று தெரிந்துகொண்டு, ஒரளவு மனத்தில் விருப்பத்தைக் கொள்வான். அதனை அடுத்து அந்தப் பெண்ணைத் தானே நேரில் போய்ப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்படுகிற நிலை வரும். படத்தைப் பார்க்கிறபோது அந்தப் பையனுக்குப் பெண்ணின் உருவம் ஒருவாறு உள்ளத்தில் பதிகிறது. அப்படிப் பதிந்தாலும் பெண் னின் உருவம் உள்ளது உள்ளபடியே பதிவது இல்லை. ஆனா லும் அது அவன் உள்ளத்தில் காதலை விளையச் செய்கிறது. ஆகவே பெண்ணை நேரில் பாராவிட்டாலும் அவளுடைய படத் திற்கும் ஒரு பயன் இருக்கிறது. அதுவே முடிந்த பயன் அல்லா விட்டாலும் தொடக்கத்தில் அது பயனுள்ளதாகவே இருக்கிறது. மூலப் பொருளாகிய பெண்ணைக் காண்பதற்கு அடையாளப் பொருளாகப் படம் உதவுகிறது. விக்கிரகங்கள் அதுபோல் சோதிமயமாக இருக்கும் ஆண்டவனுடைய திரு வுருவத்தை அகக் கண்ணினாலே பார்ப்பதற்குமுன் திருக்கோயில் 152