பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலாயிரம் கண் களில் உள்ள திருவுருவத்தைக் கண்டால் சிறிதே உள்ளத்தில் பக்தி எழுகிறது. அந்தப் பக்தி வளர வளர, அகக் கண்ணில் தியானம் செய்யத் தொடங்குகிறான். அது வளர்ந்தால் இறைவனை உண்முகக் காட்சியில் பார்க்கிற நிலை உண்டாகும். கோயிலில் காணும் திருவுருவத்தைப் புறக் கண்ணால் கண்டதோடு நிற்காமல் அகக் கண்ணில் வைத்துத் தியானம் செய்து பழக வேண்டும். அதுதான் அநுபவம் வளர்வதற்குரிய வழி. மன ஒருமைப்பாட்டோடு புறத்தில் கண்ட உருவத்தை மெல்ல மெல்லத் தியானம் செய்தால் அதுவே சோதி வடிவமாகக் காணுகின்ற இன்ப அநுபவத்தைப் பெறுவ தற்குத் துணையாக இருக்கும். இந்தத் தியானத்தைப் பெரியவர் கள் பழகுவதனால், அவர்களுக்கு ஆண்டவன் உருவம் உடைய வனாக இருப்பதால் உண்டாகிற பலன் நன்றாகத் தெரிகிறது. பேரழகன் முருகப்பெருமான் அழகே திருவுருவமாக அமைந்திருக்கிற வன். கண்ணைக் கவ்வும் பேரழகன். கண்வழியாகக் கருத்தைக் கொள்ளை கொள்ளும் மோகன சொரூபன். சூரபன்மன்கூட அவனுடைய திருவுருவத்தைக் கண்டு, 'ஆயிரம் கோடி காமர் அழகெலாந் திரண்டொன் றாகி மேயின எனினுஞ் செவ்வேள் விமலமாஞ் சரணந் தன்னில் தூயநல் லெழிலுக் காற்றா தென்றி.டின் இனைய தொல்லோன் மாயிரு வடிவிற் கெல்லாம் உவமையார் வகுக்க வல்லார்’ என்று வியந்து கூறியதாகக் கந்தபுராணம் கூறுகிறது. அத்தகைய பெருமானுடைய திருக்கோலத்தைக் கோயில் களில் அலங்கரித்துப் பார்க்கும்போது நம்மை அறியாமல் பக்தி விளைகிறது. அருணகிரிநாதப் பெருமான் பெரும் காதலுடன் திருச்செங்கோட்டு முருகனுடைய அழகுத் திருக்கோலத்தைக் கண்டார். கண்டவுடன் அவருக்கு எல்லையில்லாத ஆனந்தம் உண்டாயிற்று. உணர்ச்சியும் இன்பமும் ஒரு பெண்ணுக்குக் காதலன் கடிதம் எழுதுகிறான். அந்தக் கடிதத்தை அவள் காணும்போது அடைகிற உணர்ச்சி வேறு. 153