பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 அதையே வெறும் காகிதமாகக் கடைக்காரன் வாங்கிச் ೧೯ುದಿಲ್ಲ - போது அவன் அதைக் காணுகிற நிலை வேறு. இரண்டு பேருக்கும் காகிதமும், எழுத்தும் ஒன்று. ஆனாலும் எழுத்தை எழுதின வனுடைய நினைவும், அவன்பால் அவள் கொண்ட அன்பும் அந்தப் பெண்ணுக்குக் காதல் உணர்ச்சியை மிகுதிப்படுத்து கின்றன. அப்பர் சுவாமிகள் நடராசப் பெருமானைக் கண்டு, "குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயில் குமிண்சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணிறும் இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவ தேஇந்த மாநிலத்தே." என்ற அற்புதமான பாடலைப் பாடினார். நாமும் அதே நடராசப் பெருமானைக் காண்கிறோம். ஆனாலும் நமக்கு அத்தகைய உணர்ச்சி உண்டாவதில்லை. அந்தப் பெருமானிடத்தில் உள்ள காதல் முதிர்ச்சி அடையவில்லை. அவனது திருவுருவத்தைக் கண்ணால் காணும்போது நம்முடைய உள்ளத்தில் ஆர்வமும், பக்தியும் நிறைந்திருக்வில்லை என்பதுதான் காரணம். வெடி மருந்தைக் கெட்டித்திருக்கிற குழாயில் ஒரு திரி இருக்கும். அந்தத் திரியில் நெருப்பை வைத்துவிட்டால் உடனே காது செவிடுபடும்படி வெடிக்கும். வெடிக்க வேண்டுமானால் அந்தக் குழாயில் வெடி மருந்தைக் கெட்டித்திருக்க வேண்டும். பின்பு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் திரியில் தீ வைக்க வேண்டும். மருந்து அடைத்திருந்தாலும் தீ வைக்காவிட்டால் வெடிக்காது. தீயும் அவசியம்; வெடிமருந்தும் அவசியம். தீப்போல இருப்பதுதான் ஆண்டவனுடைய திருக்கோலம். வெடி மருந்து பக்தர்களுடைய நிலை. நம்மிடத்தில் பக்தி என்ற வெடி மருந்து இருந்தால்தான் ஆண்டவன் தரிசனம் ஆனந்த உணர்ச்சியை உண்டாக்கும். அது இல்லாதபோது நம்முடைய மனம் கட்டை யாக, கல்லாய் இருக்கும். மணிவாசகர் அப்படியே சொல்கிறார். 'உன்னுடைய திரு வருளால் நான் பெற்ற அநுபவம் பல. உன்னுடைய அருளைப் பெறாமல் வாடுகின்றவர்கள் பலர்; பலபடியாகத் தவம் செய்து கொண்டு வாடுகிறார்கள். அப்படி இருக்கும் நீ எனக்கு எளியவனாக வந்து அருள் செய்தாய். உன்னுடைய அருளைப் 154