பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலாயிரம் கண் நமக்கும் என்ன தொடர்பு? அவனை நாம் காண முடியுமா? - இப்போது சொன்னவற்றோடு நிறுத்திவிட்டால் இத்தகைய ஐயங்கள் நிகழும். அதைப் போக்கத் தொடங்குகிறார் அருண கிரியார். அவன் திருச்செங்கோட்டில் வந்து எழுந்தருளியிருக் கிறான். கிடைத்தற்கரிய ஒரு பொருள் - மிக மிகச் சிறந்த பொருள்- நாம் சென்று அடைவதற்குரிய ஓர் இடத்தில் இருக்கிற தென்றால் யார்தாம் அதைப் பெற முயற்சி செய்ய மாட்டார்கள்? இந்த அரிய பெரும்பொருள் நாம் வாழும் உலகத்தில், நாம் அடையாளம் கண்டுகொள்ளும் ஊரில் இருக்கிறது. அந்த அடையாளத்தைப் பின்னே சொல்கிறார். முதலில், மேதினியில் என்கிறார். நாம் வாழ்கிற இதே பூமியில்தான் இவ்வளவு பேரழகுடைய பெருமான் எழுந்தருளியிருக்கிறான் என்று தொடங்குகிறார். அடையாளம் திருச்செங்கோட்டை அடையாளத்தோடு சொல்கிறார். சேலார் வயற்பொழில் செங்கோடனை. அந்த ஊருக்குள் போகும்போது அவனுடைய அருளினால் எங்கும் பச்சைப் பசேல் என்று வயல்கள் பரந்திருப்பதைக் காணலாம். இது அருணகிரியார் கண்ட திருச்செங்கோடு. வயல் வளம் உண்டாவதற்குக் காரணம் நீர்வளம் நிரம்பியிருந்ததுதான். அங்கே சேல் மீன்கள் உலாவுகின்றன. பொழில்களும் அங்கங்கே இலங்குகின்றன. சேலார் வயற்பொழில் சேல் மீன்கள் நிறைந்திருக்கிற வயல்களும் பொழில்களும் நீர் வளத்தையும் மக்களுடைய நீர்மை வளத்தையும் காட்டுகின்றன. அங்கே உள்ளவர்கள் வயல்களில் உள்ள மீன்களைக் கண்டு இன்புறுகிறார்களேயன்றி உண்டு துன்புறுத்த மாட்டார்கள். ஆதலின் வயல்களில் சேல்கள் நிரம்பியிருக்கின்றன. அகத்து நீர்மையும் புறத்து நீரும் பொருந்திய அந்த ஊரில் மலையின் மேலே செங்கோட்டு வேலன் எழுந்தருளியிருக்கிறான். எங்ே 16贯