பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 இருக்கிறவன் நமக்கு அருள் செய்வதற்கு, நாம் காலால் நடந்து சென்று அடைவதற்குரிய ஊரில், கண்ணாலே காணுகின்ற நிலையில், கையால் தொழுகின்ற திருக்கோயிலில் எழுந்தருளி யிருக்கிறான். இந்த வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கும்போது நாம் அங்கே போகவேண்டாமா? இத்தகைய எண்ணம் வரவே அருணகிரியார், சென்று கண்டு தொழ என்கிறார். காணும் காட்சி இங்கே செல்வதும், காண்பதும், தொழுதலும் ஆகிய செயல் களைச் சொல்கிறார். செல்வதற்குரியன கால்கள். காண்பதற் குரியன கண்கள். தொழுவதற்குரியன கைகள். திருச்செங்கோடு சென்று, மலையின் மேலே ஏறி, திருக்கோலத்தைக் கண்டு, கை கூப்பித் தொழ வேண்டும், அப்படித் தொழும்போது தமக்குள்ள குறை இன்னது என்று தெரிந்துகொண்டு வருந்துகிறார் அருண இரியார். சென்று கண்டு தொழ நாலாயிரம் கண் படைத்திலனே! செல்வதற்கு நாலாயிரம் கால்களும், காண்பதற்கு நாலாயிரம் கண்களும், தொழுவதற்கு நாலாயிரம் கைகளும் பிரமன் படைக்கவில்லையே என்று சொல்லியிருக்கலாம். ஆனால் இங்கே ஆண்டவனைக் காண்பது தலைமையான செயல். அது மாத்திரம் அன்று. கால் உடையவன் நடந்து செல்கிறான். நடந்து செல்வதற்கு உறுதுணையாகக் கண் பார்க்க வேண்டும். ஆகவே வழி தெரிந்து நடப்பதற்குக் கால் மாத்திரம் இருந்தால் போதாது; கண்ணும் வேண்டும். இறைவனைத் தரிசனம் செய்து கையி னாலே தொழ வேண்டுமானாலும் அதற்கும் கண் வேண்டும். நடத்தல், காணுதல், தொழுதல் ஆகிய மூன்று காரியங்களுக்கும் கண்கள் இன்றியமையாதன. ஆதலின் அவற்றை வற்புறுத்தினார். மேதினியில் நாம் சென்று அடையும் எல்லையில் இருக்கும் திருச்செங்கோட்டுக்குப் போக இரண்டு கால்கள் போதும். இரண்டு கால்களால் நடக்கும் அளவுக்குள் அகப்பட்டவை அத்தலமும் 162