பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலாயிரம் கண் (திருமாலுக்கு மருமகனை, அம்பலத்தில் ஆடுகின்ற சிவ பெரு மானுக்கு மகனை, தேவர்களுக்கெல்லாம் மேம்பட்டு விளங்கும் தேவனை, மெய்யறிவே வடிவான கடவுளை, இந்த உலகில் சேல்மீன்கள் நிறைந்த வயல்களையும், சோலைகளையும் உடைய திருச்செங்கோட்டில் உள்ள முருகனைச் சென்று தரிசித்துத் தொழுவதற்கு ஏற்றபடி நாலாயிரம் கண்களை அந்தப் பிரமன் படைத்தானில்லையே! மாலோன் - பெருமையையுடையோன், கரியவன் என்றும் சொல்ல லாம். வயலையும் பொழிலையும் உடைய செங்கோடு. செல்லுதலும் காணுதலும் தொழுதலும் அடுத்தடுத்து நிகழ்தலின் அம்முறையிற் சொன்னார். அந்த : உலகறி சுட்டு. அடியேன் என்ற எழுவாய் எஞ்சி நின்றது. அடியேன் தொழ, நான்முகன் படைத்திலனே'. முருகன் பேரழகுடையவன் என்பது இப்பாட்டின் கருத்து. இது கந்தர் அலங்காரத்தில் 90-ஆவது பாடல். க.சொ.VI.11 165