பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சால நன்று என்று அருணகிரியார் சொல்வார். செங்கோட்டு வேலவனை எங்கே நினைத்தாலும் அங்கே வந்து அவன் தோன்றுவானாம். அவருடைய தியான நிலை அப்படிச் சிறந்து நின்றது. 'பதுமமலர்க் கொங்கே தரளம் சொரியும் செங்கோடைக் குமரன்என எங்கே நினைப்பினும் அங்கேஎன் முன்வந்து எதிர்நிற்பனே.” என்று பாடினார். நமக்கு அத்தகைய தகுதி இல்லை. அவனுடைய காட்சியை மனத்திலே காண முடிவதில்லை. அகத்திலே கண்ட பிறகல்லவா புறத்திலே காண முடியும்? ஆனாலும் எந்த இடத் திலும் ஆண்டவனை வாழ்த்தலாம். அவனுடைய புகழை எல்லா இடங்களிலும் சொல்லிக் கொண்டிருக்கலாம். திருநாமத்தின் பெருமை அவனுடைய நாமத்தையும் சொல்லலாம். அவனுடைய உருவத்தைக் கோயிலுக்குச் சென்றால்தான் கண்ணால் காண முடியும். நாமத்தையோ எங்கும் சொல்லலாம்; எப்போதும் சொல்லலாம். ஆகவேதான் இறைவனுடைய உருவத்தைக் காட்டிலும் நாமம் சிறந்தது என்று சொல்வார்கள். இன்று நாம் உலகத்தில் தரிசிக்கின்ற உருவங்கள் ஆண்டவனுடைய நேரான உருவம் அல்ல. அவனைத் தம்முடைய அருள் கண்ணால் கண்ட பெரியவர்கள் அவன் இப்படித்தான் இருப்பான் என்று சொல்லி அடையாளமாக அமைத்துக் காட்டிய திருவுருவங்கள் அவை. ஒருவனுடைய போட்டோப் படத்தைப் பார்ப்பது போலத்தான் அந்தத் திருவுருவங்களைக் கண்டு நாம் பூசை செய்கிறோம். அவனுடைய திருநாமம் அத்தகையது அன்று. அவனுடைய நாமம் வேறொரு நாமத்தின் அடையாளம் அன்று. சாக்ஷாத் நாமமே அது. உலகத்தில் உள்ள சமயங்களில் சிலவற்றைச் சார்ந்த வர்கள் அவனுக்கு உருவம் இல்லையென்று சொல்வார்களே யன்றிப் பெயர் இல்லையென்று சொல்வதில்லை. அல்லா, பரம பிதா என்று சொல்லாமல் இருக்க இயலாது. இந்த வகையிலும் ஆண்டவனுடைய உருவத்தைக் காட்டிலும் திருநாமம் சிறந்தது என்று தெரிந்துகொள்ளலாம். மற்றொன்று. நாம் வணங்கும் ஆண்டவனுடைய திருவுருவங் களைக் குறிப்பிட்ட இடத்தில் வைத்துக் கோயில் கட்டியிருக் 鱼67