பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சால நன்று கருமால் மருகன் செங்கோடனை மீட்டும் நினைக்கும்போது சென்ற பாட்டில் முதலில் சொன்னதுபோலத் திருமால் மருகன் என்று மறுபடியும் நினைவு கொள்கிறார். அங்கே மாலோன் மருகனை என்று எடுத்தார். இங்கே, கருமான் மருகனை என்று தொடங்குகிறார். திருமால் கரிய நிறம் உடையவர். அவருக்கு மருகன் முருகப்பெருமான். வள்ளிநாயகியை அவன் திருமணம் செய்துகொண்டான். அப் பெருமாட்டி ஒரு மானுக்கு மகளாகத் திரு அவதாரம் செய்தாள். செம்மான் மகளாகத் திகழ்ந்தாள். திருமகள் அம்சம் பெற்றது அந்தச் சிவந்த மான். கரிய திருமாலினுடைய மருமகனாக இருக் கிறவன் சிவந்த திருமகளாகிய மானின் மகளைக் கல்யாணம் செய்து கொண்டான். அவன் எப்படி வள்ளியைத் திருமணம் செய்து கொண்டான் என்பதை இதில் சொல்கிறார். வள்ளியைக் களவு கொண்டவன் கருமால் மருகனைச் செம்மான் மகளைக் களவுகொண்டு வரும் ஆகுலவனை. ஆகுலம் - கவலை. வள்ளி நாயகியைத் திருட்டுத்தனமாக வாவது எடுத்துச் செல்ல வேண்டும் என்ற கவலை முருகனுக்கு இருந்தது. நேர்மையாக அவனுடைய தந்தையை அணுகி, “எனக்குத் திருமணம் செய்து கொடு' என்று ஆண்டவன் கேட்க வில்லை. தினைப் புனத்தில் தினை காத்துக் கொண்டிருந்த வள்ளி நாயகியிடம் தன்னை மறைத்துக் கொண்டு சென்றான். திருடர்கள் எப்போதும் தம்முடைய உருவத்தை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள மாட்டார்கள். முருகன் வேடனாகவும், கிழவனாகவும், வேங்கை மரமாகவும் தன்னுடைய கோலத்தை மாற்றிக் கொண் டான். திருடன் செய்கிற காரியம் இது. பொருளுக்குரியோர் அறியாமல் அந்தப் பொருளை எடுத்துச் செல்வதுதான் களவு. வள்ளிநாயகியை வள்ளி மலைக்கு அரசனாகிய நம்பி ராஜன் வளர்த்து வந்தான். கண்ணை இமை காப்பது போல அவளைக் காப்பாற்றினான். தன்னுடைய மகள் என்று எண்ணி நலங்கள் 169