பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 செய்தான். அவனையும் அறியாமல் திருட்டுத்தனமாக முருகப் பெருமான் வள்ளியெம்பெருமாட்டியை எடுத்துச் சென்றான். ஆகையால் அது திருட்டு ஆயிற்று. அப்போது வள்ளிநாயகியை எப்படியாவது அடைய வேண்டுமென்ற வியாகுலம் அவனுக்கு இருந்ததாம். 'வேடுவர் புனத்திலுரு மாறிமுனி சொற்படி வியாகுல மனத்தினொடு போம்விற்காரனும்’ என்று திருவகுப்பில் வருகிறது. நாரதர் கூறிய சொற்படியே வள்ளி நாயகியை அடைய வேண்டும் என்ற வியாகுல மனத்தோடு உருமாறிப் போனானாம். வள்ளி நாயகியை ஆட்கொள்வதற்காகச் செய்த திருவிளையாடல் இது. அந்தப் பிராட்டிக்கு முருகனை அடையவேண்டுமென்ற காதல் இருந்திருக்கலாம். அது வெளிப் படையாகத் தெரியவில்லை. அவளை ஆட்கொள்ள வேண்டுமென்ற கவலை மிகுதியாக முருகனுக்கு இருந்தது. முருகனுடைய பெருங் கருணையை இந்தத் திருவிளையாடல் காட்டுகிறதென்பதைப் பலமுறை பார்த்திருக்கிறோம். இறைவனே வலியவந்து தன்னை ஆட்கொள்ளும் பேறு வள்ளியெம்பெருமாட்டிக்குக் கிடைத்தது. குரங்கும் பூனையும் குரங்குக்கும் பூனைக்கும் ஒரு வகையில் வித்தியாசம் உண்டு. குரங்கு தன் குட்டியைப் பற்றிக்கொள்ளாது. குட்டியே தாய்க் குரங்கைப் பற்றிக்கொள்ள வேண்டும். மரத்திற்கு மரம் தாய் தாவும்போது குட்டி சிறிதும் சோர்வில்லாமல் தாயைப் பற்றிக் கொண்டிருக்கும். பற்றிக் கொள்ளாமல் பிடியை விட்டுவிட்டால் அந்தக் குட்டியையே கொன்றுவிடும் என்று சொல்வார்கள். ஆனால் பூனையோ அப்படி அன்று. பூனைக் குட்டிக்குக் கவலை சிறிதும் கிடையாது. தாய் எங்கே போனாலும் தன்னுடைய குட்டியைத் தன் வாயில் கெளவிக் கொண்டு எடுத்துச் செல்லும். குரங்கினத்தில் குட்டிக்குக் கவலை. பூனை இனத்தில் தாய்க்குக் శ్రీధfథ}{3}, முருகன் கவலை உலகத்தில் உள்ள ஆருயிர்கள் எல்லாம் குழந்தைகள். அந்தக் குழந்தைகளுக்குத் தாயாக இருப்பவன் இறைவன். i7 Ο