பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சால நன்று 'பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்' என்று சொல்கிறார். குற்றமற்ற நன்மையை விளைவித்தால் பொய்யையும் மெய்யாகவே எண்ணவேண்டும் என்பது அந்தக் குறளால் தெரியவருகிறது. அதுபோலவே களவும் நன்மை பயப் பதனால் ஏற்றுக்கொள்வதற்குரியது என்று சொல்லலாம் அல்லவா? இறைவனையே கள்வன் என்று சொல்வார்கள். அன்பர்களின் அறியாமையை அவர்கள் அறியாமலே களவு கொள்ளும் கருணை உடையவன் அவன். குழந்தையின் கையில் கத்தியிருக்கிறது. அது தன் கையையோ காலையோ வெட்டிக்கொள்ளுமே என்று அஞ்சு கிறாள் தாய். நல்ல வேளையாக அது சோர்ந்து போய்த் தூங்கத் தொடங்குகிறது. அந்தச் சமயத்தில் அந்தக் குழந்தை அறியாமல் அன்னை அதை எடுத்துக் கொள்கிறாள். அது ஒரு வகையில் களவுதான். ஆனால் அந்தக் களவினால் குழந்தைக்கு நன்மையே விளைகிறது. இறைவன் அந்த வகையில்தான் நலம் செய்கிறான். பூரீ ருத்திரம் இறைவனைக் கள்வனென்றே சொல்கிறது; சாதாரணக் கள்வன் அன்று, கள்வர் தலைவன் என்று சொல்கிறது. "தஸ்கரானாம் பதயே நமோநம” என்பது ருத்திரம். திருஞான சம்பந்தப் பெருமான் சிவபிரானை, 'உள்ளம்கவர் கள்வன்' என்று பாடினார். வள்ளிநாயகியைத் தடுத்தாட்கொண்ட முருகன் அப்பிராட்டி தன்னை இன்னானென்று அறியாதிருந்தும் அவளுக்கு அருள் செய்ய முந்தினான். அவளை யாரும் அறியாமல் எடுத்துச் சென்று திருத்தணிக்குச் சென்றான். அவளைக் களவிலே மணக்க வேண்டுமே யென்ற கவலையோடு இருந்தான். உயிர்கள் உய்ய வேண்டுமென்ற கவலை இறைவனுக்கு இருக்கிறது. தன் மகன் படித்து முன் னுக்கு வர வேண்டுமே என்ற கவலை தந்தைக்கு இருக்கிறது. ஆனால் அந்தப் பிள்ளைக்கு அவ்வளவு கவலை இருப்பதில்லை. வள்ளி நாயகியைத் தன்னிடத்தைச் சார்ந்து வாழும்படி அருள் செய்ய வேண்டுமென்ற கவலை முருகனுக்கு இருந்தது. திருமாலுக்கு மருமகனாக உள்ள அப்பெருமான் திருமகளாகிய 175