பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 சிவந்த மான் ஈன்ற மகளைக் களவில் எடுத்துக் கொண்டு வர வேண்டுமென்ற கவலையோடு இருந்தவன் என்று அருணகிரி நாதர் சொல்கிறார். கருமால் மருகனைச் செம்மான் மகளைக் களவுகொண்டு வரும் ஆகுலவனை. சேவற் கொடியோன் ஆண்டவன் வெற்றியை உடையவன். வெற்றிக்கு அறிகுறி யாக அவன் திருக்கரத்தில் சேவல் கொடியிருக்கிறது. சேவலைக் கையிலே கொண்டவன் என்ற பொருளில், சேவற் கைகோளனை என்கிறார் அருணகிரியார். சேவல் முருகப் பெருமானுடைய தனிப் பெருமையைக் காட்டுகிறது. பகைவரை அழித்துக் கொல்லுதல் உலகத்து மன்னர்களுக்கு இயல்பு. ஆனால் இங்கே முருகப்பெருமான் தன்னை எதிர்த்த சூரபன்மனை அடியோடு அழிக்கவில்லை. அவனுடைய உடம்பு இரண்டு பகுதியாகப் பிரிய ஒரு பகுதியை மயிலாகவும், மற்றொரு பகுதியைக் கொடியாகவும் மாற்றி ஏற்றுக் கொண்டான். அவன் திருக்கரத்திலுள்ள சேவல் முருகப் பெருமானுடைய வீரத்தைக் காட்டி, அவனைச் சேர்ந்த பகைவர் கள்கூட நன்மை பெறுவார்கள் என்பதைப் புலப்படுத்துகிறது. சேவலைக் கையில் கொண்டமையால் அவன் பெருவீரன், பெருங்கருணையாளன் என்பதை உணர்கிறோம். வேலன் அவன் திருக்கரத்தில் ஏந்தியுள்ள படைக்கலம் வேல். அந்த வேல் போரில் புகுந்தால் வெற்றியைத் தரும் தன்மை உடையது. மாமரமாக நின்ற சூரனைச் செற்றது அது. அவன் முருகப் பெருமானை எதிர்த்து நின்றான். தேவலோகத்திலுள்ள அமரர்கள் மீண்டும் பழைய வாழ்வு பெற்று உய்யவேண்டுமென்று கருதியே வடிவேற்பெருமான் சூரனோடு போரிட்டான். அவனுக்கும் சூரனுக்கும் நேரே பகை ஒன்றும் இல்லை. தன்னிடத்தில் வந்து 176