பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை இரண்டாவது பாட்டு முருகன் சூரசங்காரம் செய்த வரலாற்றை உணர்த்துகிறது. அந்தப் பாட்டில் மயிலும் வேலும் வருகின்றன. மூன்றாவது மிகவும் பயனுள்ள பாட்டு, தம்முடைய உயிர் உடம்பினின்றும் பிரியும் வேளையில் தடுமாற்றமின்றி இறைவன் திருவருள் நினைவோடு உயிர் விடவேண்டுமென்று பெரியோர் விரும்புவர். வாழ்நாள் முழுவதும் அன்பு செய்ததன் பயன் அப்போது தெரியும். உண்மை அன்பா, போலி அன்பா என்பதைத் தெரிந்து கொள்ளும் சமயமும் அதுவே. "இறைவனே, உன் சரணமல்லால் எனக்குப் புகல் இல்லை. உயிர் விடும்போது என்னை ஆண்டு கொள்ள வேண்டும்" என்பதை அப்போதைக்கு இப்போதே சொல்லிவைப்பது அருளாளர்களின் வழக்கம். அந்த முறையில் அருணகிரியார் பாடும் பாட்டு இது: 'மைவரும் கண்டத்தர் மைந்தகந்தாஎன்று வாழ்த்தும் இந்தக் கைவரும் தொண்டன்றி மற்றறியேன்கற்ற கல்வியும் போய்ப் பைவரும் கேளும் பதியும் கதறப் பழக நிற்கும் ஐவரும் கைவிட்டு மெய்விடும் போதுன் அடைக்கலமே.” (84) இப்பாடலை நாம் ஒவ்வொரு நாளும் பாராயணம் செய்தால் இறைவன் அருள்வான் என்ற நம்பிக்கை ஏற்படும். இது உயிரைக் காத்துக்கொள்ள உதவும் பாட்டு. நான்காவது பாடல் யோகிகளை விளித்துச் சொல்வது. "ஏன் நீங்கள் மிகவும் வருத்தமுற்று மூச்சை அடக்கித் துன்புறுகிறீர்கள்? முருகன் திருவடியில் உள்ளத்தைச் செலுத்தி அன்பு செய்யுங்கள். வீடு எளிதிலே கிடைக்கும்" என்று எளிய வழியைக் காட்டுகிறார் இந்தப் பாட்டில். அருணகிரியார் தம் நூல்களில் பல இடங்களில் யோகிகளைக் கண்டு இரங்கும் முறையில் பாடியிருக்கிறார். வேறு பெரியவர்களும் பாடியதுண்டு. தமிழில் கலம்பகம் என்று ஒருவகைப் பிரபந்தம் உண்டு. அதில் தவம் என்பது ஓர் உறுப்பு. அது, உடம்பை ஒறுத்துத் தவமும் யோகமும் செய்பவர்களைக் க.சொ.V1-2 5