பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்டையம் புண்டரிகம் இறைவனுடைய திருஉருவம் எல்லை கடந்தது. அதனை முழுவதும் காண்பதற்கு நம்மால் முடியாது. ஆனால் அவ னுடைய திருவடி நாம் காணும் வகையில் நிலத்தில் நடப்பது; நாம் இருக்கும் பூமியில் படர்ந்து நலம் செய்வது. ஆதலின் நாம் அவனோடு தொடர்பு உடையவர் ஆகவேண்டுமானால் அவன் திருவடியைப் பற்றிக் கொள்ள வேண்டும். மெல்ல நடந்து பழகு கிற குழந்தை தாய் நடக்கும்போது அவள் முழங்காலைக் கட்டிக் கொள்கிறது. அந்தக் குழந்தை தாயின் முழங்காலுக்குத்தான் வரும். ஆகையால்தான் முழங்காலைப் பற்றிக் கொள்கிறது. நாமோ ஆண்டவனுடைய திருவடி அளவிற்குக்கூட வரமாட்டோம். அவன் உருவத்தை எப்படி முற்றும் பற்றிக் கொள்ள இயலும்? இறைவன் திருவடி எல்லாத் தத்துவங்களுக்கும் அடிப் படையானது. எம்பெருமான் திருவுருவத்துடன் எழுந்தருளும் போது பலவகை உறுப்புகளுடன் வருகிறான். அந்தத் திருவுருவத் தில் திருவடியை நாம் காணவேண்டுமென்று அதனை வெளிப் படையாகக் காட்டி அலங்காரம் செய்வார்கள்; மறைக்கிற வழக்கம் இல்லை. நடராசப் பெருமான் தன்னுடைய திருவடிகளுள் ஒன்றை மேலே தூக்கிக் காட்டுகிறான். அதைக் குஞ்சித பாதம் என்பார்கள். அதனையே முத்தி என்று சொல்வது வழக்கம். எல்லோரும் காண எடுத்துக் காட்டிய திருவடி அது. எல்லோருக் கும் லட்சியப் பொருளாக நிலவுகிறது. அது. தொண்டர் காணும் முறை அருணகிரியார் முருகப் பெருமானுடைய திருவடித் தொடர்பை இரந்து வேண்டுகிறார். அந்தத் திருவடி ஞான சொரூபமாக இருக்கிறது என்று சொல்கிறார். அது தத்துவத்தில் ஞானமாகவும், உருவத்தில் தண்டையம் புண்டரிகமாகவும், பயனில் தொண்டர் கண்டு அண்டி மொண்டு ஆழ்ந்து விடுவதாகவும் விளங்குகிறது. ஞானம் பெற்று இறைவனை அடையவேண்டுமென்று சிலர் சொல்வார்கள். ஆனால் எம்பெருமானுடைய திருத்தொண்டைச் செய்வதே தம்முடைய செயலாக வாழ்கின்ற பக்தர்களுக்கு இறைவனுடைய திருவடியே ஞானமாக வந்து அமையும். மனம், வாக்கு, காயம் என்னும் மூன்று கரணங்களினாலும் அவனுக்குத் தொண்டு புரிபவர்கள் தொண்டர்கள். மனத்தால் அவனைத் 187