பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 காது கேட்பது இல்லை. சில சமயங்களில் நாம் எங்காவது பாராக்குப் பார்த்துக் கொண்டிருந்தால் பிறர் சொல்வது காதில் விழுகிறது இல்லை. தூங்கும் பொழுதும் காது கேட்கிறது இல்லை; இயல்பாகக் காது கேட்கும் உணர்வு போக, ஒருவகைச் செவிட்டு நிலை வந்துவிடுகிறது. ஒன்றிலே மனம் லயித்துவிட்டபோது காது கேளாத நிலை இருப்பதைப் பார்க்கிறோம். புத்தகத்தை ஒருவன் படித்துக் கொண்டிருக்கிறான். பக்கத்திலிருந்து யாரே னும் ஒருவன் மெல்லக் கூப்பிட்டால் அவன் காதில் விழாது. காற்று அடித்தாலும் தெரியாது. அவனுக்குப் புத்தகத்தின்மேலே கண் மற்றவற்றை எல்லாம் மறந்துவிடுகிறான். ஏதேனும் ஒரு பொறி தீவிரமாக இருக்கிற போது மற்றவை எல்லாம் தம் வலுவை இழந்து நிற்கிறது இயல்பு. அந்தப் பொறியினிடத்தில் எத்தனைக்கு எத்தனை ஈடுபாடு மிகுதியாக இருக்கிறதோ அத்தனைக்கு அத் தனை மற்றப் பொறிகள் தம் ஆற்றலை இழந்து நிற்கும். முதலில் சுந்தரமூர்த்தி நாயனாருடைய கண் தில்லைச் சிற்றம்பலத்தில் இறைவனுடைய திருவுருவத்தைப் பார்க்கத் தொடங்கியது. அந்தக் காட்சி வர வர உரம் பெற்றது. மற்றப் பொறிகள் எல்லாம் தம்முடைய ஆற்றலை இழந்தன. ஒலி எதுவும் அவர் காதில் விழவில்லை. மெல்ல வீசிய காற்றை அவர் உணரவில்லை. அவர் வாயிலே தேன் சொட்டினாலும் அப்போது அவருக்குச் சுவை தெரியாது. மணத்தை அவருடைய நாசி தெரிந்து கொள்ளவில்லை. ஐந்து சன்னல்கள் உள்ள ஒர் அறை யில் மற்ற நான்கு சன்னல்களை அடைத்துவிட்டால் எப்படி ஒரு சன்னல் வழியாக அதிகக் காற்று வருமோ அப்படிக் கண் ஒன்று மாத்திரம் வேலை செய்ய மற்றப் பொறிகளெல்லாம் அடங்கி நின்றன. ஐந்து பொறி அறிவையும் கண்களே கொண்டன. பின்பு அடுத்தபடியாக அவருடைய அந்தக்கரணம் வேலை செய்யத் தொடங்கியது. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்று அந்தக்கரணம் நான்கு வகைப்படும். இவற்றில் ஒன்றைப் பற்றிக் கொள்ளும் தன்மை உடையது சித்தம். அதன்ை சிந்தை என்றும் சொல்வார்கள். அந்தக்கரணத்திலுள்ள ஏனைய மூன்று பகுதி களும் அடங்கி நிற்க, உறுதியாக ஒன்றைப் பற்றிக் கொள்ளும் சித்தம் மாத்திரம் தன் வேலையைச் செய்தது. நடராசப் பெரு மானைக் கண்கள் காண, அதனாலே எழுந்த உணர்ச்சி உரம் 19C)