பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலம்புரியும் கிண்கிணியும் அருணகிரி நாதர் முருகப்பெருமானுடைய திருக்கோலத் தைப் பலபடியாக நினைத்து நமக்கும் காட்டுகிறார். அந்தப் பெரு மானுடைய திருமேனி உறுப்புகளின் நலன்களையும் பலவிடங் களில் சொல்லியிருக்கிறார். அவனுடைய வீரச் செயல்களையும், கருணைப் பெருக்கையும் நினைப்பூட்டியிருக்கிறார். சூரபன்ம னோடு போர் செய்த கதை கந்த புராணத்தில் வருகிறது. ஆனால் அருணகிரியார் அதனைப் பலபல வகையில் எடுத்துக்காட்டி முருகப்பெருமானுடைய வீரத்தை விரிவாக எடுத்துச் சொல் கிறார். வள்ளியம் பெருமாட்டியைத் திருமணம் செய்துகொண்ட அற்புதத் திருவிளையாடல் அருணகிரியார் திருவாக்கில் வெவ் வேறு வகையில் சுவையூட்டுகிறது. இளமைத் திருவிளையாடல்கள் நாம் இப்போது பார்த்து வரும் கந்தர் அலங்காரத்தில் முருகப் பெருமானுடைய இளமைப் பருவத் திருவிளையாடல்கள் பலவற்றைப் பார்த்திருக்கிறோம். அருணகிரியார் முருகனது இளமைத் திருமேனியையும், அவன் தன் காலில் அணிந்திருக் கும் தண்டை, வெண்டையம், சிலம்பு முதலியவற்றையும் வருணித் திருக்கிறார். முன் ஒரு முறை இளமுருகனுடைய இடையில் அணிந்த கிண்கிணி ஓசை பற்றிய பாட்டு ஒன்றைப் பார்த்தோம். "ஒருவரைப் பங்கில் உடையாள் குமாரன் உடைமணிசேர் திருவரைக் கிண்கிணி ஓசை படத்திடுக் கிட்டசுரர் வெருவரத் திக்குச் செவிடுபட் டெட்டுவெற் புங்கனகப் பருவரைக் குன்றும் அதிர்ந்தன தேவர் பயம்கெட்டதே." இப்போது இந்தக் கிண்கிணி ஓசையைப் பற்றி வேறு ஒரு பாட்டு பாடுகிறார். இங்கே ஒப்பு நோக்கும் வகையில் முருகனது சிறப்பை எடுத்துச் சொல்கிறார்.