பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலம்புரியும் கிண்கிணியும் அது பெரிது அன்று. அதனைக் கேட்டு அசுரர்கள் திடுக்கிடுகிறார் கள். இதனை முன்னே காட்டிய பாட்டுச் சொல்லியது. அந்த ஒலி நெடுந்துரம் கேட்டது என்பதை இங்கே சொல்ல வருகிறார். பதினான்கு உலகமும் கேட்டது என்று சொல்லும்போது, திருமால் ஊதின சங்கு அவ்வளவு தூரம் கேட்கவில்லை; மிகக் குறுகிய தூரத்திற்குத்தான் கேட்டது' என்பதையும் சொல்லி ஒப்பு நோக்கச் செய்கிறார். முருகனுடைய கிண்கிணி ஓசை நெடுந்துரத்திற்குக் கேட்டது. அது கிண்கிணியின் பெருமையைக் காட்டுவது மட்டும் அன்று. அதனை அணிந்த பெருமானுடைய வலியையும் காட்டுவது. 'இராமன் வில்லை ஒடித்தான். அந்த ஓசை நெடுந்துரம் கேட்டது. என்று பாடுகிறார் கம்பர். வில்லின் பெருமையோடு அதை ஒடித்தவனின் பெருமையும் அதில் இணைந்திருக்கிறது. முதலில் மாமனாகிய திருமால் எழுப்பிய வலம் ரி ஒசையைப் பற்றிச் சொல்கிறார். மண்கமழ் உந்தித் திருமால் வலம்புரி ஓசை அந்த விண்கமழ் சோலையும் வாவியும் கேட்டது. இது பாகவதத்தில் வரும் கதை. ஊடலும் கூடலும் ஒருநாள் கண்ணபிரான் ருக்மிணியுடன் அமர்ந்திருந்தான். அப்போது அவன் ருக்மிணிப் பிராட்டியைப் பார்த்துப் புன்னகை பூத்தான். 'ஏன் நகைக்கிறீர்கள்?' என்று பிராட்டி கேட்க, கண்ணன், 'உலகத்தில் அரசர் திலகமும் உயர்ந்த பெருமையோடு கூடியவனுமாகிய விதர்ப்ப மன்னனுடைய புதல்வி நீ. நானோ எனக்கென்று ஒர் அரசு இல்லாதவன். அதுவன்றி ஆயர் மத்தியில் வளர்ந்தவன். ஆயர்பாடியில் வெண்ணெய் முதலியவற்றைத் திரு டினவன். சராசந்தனுக்கு அஞ்சி மதுரையை இழந்து துவார கைக்கு வந்தவன். இப்படிப் பலவகையில் இழிவு பெற்ற என்னை நீ கணவனாகத் தேர்ந்தெடுத்தாயே! இது உன்னுடைய அறியாமையைக் காட்டவில்லையா?" என்று கேட்டான். மேலும் பல வகையில் தன்னை இழிவாகக் கூறிக் கொண்டான். இது கேட்ட ருக்மிணிப் பிராட்டிக்கு மிக்க வருத்தம் உண் டாயிற்று. அதனால் மயங்கி வீழ்ந்தாள். அதைக் கண்ட கண்ணன் 2O3